அரசியலா ஆளவிடுங்க சாமி.. பதறி ஓடும் நடிகை ஸ்ரேயா

சிவாஜி புகழ் நடிகை ஸ்ரேயா அரசியலுக்குத் தான் வருவது சாத்தியமற்றது என்று நெற்றியில் அடித்ததுபோல பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

By Rajeswari

சென்னை: சிவாஜி புகழ் நடிகை ஸ்ரேயா அரசியலுக்குத் தான் வருவது சாத்தியமற்றது என்று நெற்றியில் அடித்ததுபோல பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

சமீபகாலமாகத் தமிழ் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி நாயகனாக நடிக்கும் "நரகாசுரன்" திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் அடியெடுத்து வைக்கின்றார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படத்தை, பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார்.

 I am not at all fit for politics Actress shriya saran

இந்நிலையில் இந்தப் படம் குறித்துப் பேச சென்னையில் பத்திரிகையாளர்களை ஸ்ரேயா சந்தித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும், தான் இதுவரை நடித்த படத்தில் தன் மனதிற்கு நெருக்கமான படம் சிவாஜி என்றும், அதில் ரஜினிகாந்துடன் நடித்தது தனது பாக்கியம் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ரஜினிகாந்த் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சரிசமமாக பார்க்கக் கூடிய மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றும் அவரை போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்றும் கூறினார்.

மேலும் நிறைய பேர் தன்னிடம் சினிமா நடிகைகள் விஜயசாந்தி, ஜெயப்பிரதா போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதைப் போல் நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று கேட்கின்றனர், நான் அதற்குச் சரிவர மாட்டேன்.

அரசியலுக்கு வருவதற்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும் தனக்கு அதற்குக் கொஞ்சம் கூடத் தகுதி இல்லை என்று அவர் கூறினார், மேலும் தனக்கு நடனத்தின் மீதுதான் ஆர்வம் அதிகம் அது சம்மந்தமான படங்களில் நடிப்பதுதான் தனக்குப் பொருத்தமாக இருக்கும், அது போன்ற வாய்ப்பிற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நடிகை ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X