மீடூவில் புகார் கூறியதால் சினிமாவில் ஒதுக்கப்பட்ட பிரபல நடிகை.. புதிய அவதாரம்.. அதிரடி முடிவு!
திருவனந்தபுரம்: மீடூவில் புகார் கூறியதால் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குவதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
பிரபல மலையாள .நடிகை பார்வதி. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான இவர், தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்த பார்வதி, அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மலையாள நடிகைகள்
இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு தனது கண்டனங்களையும் தெரிவித்தார் பார்வதி. மேலும் நடிகைகள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பிலும் பொறுப்பில் இருந்தார் பார்வதி.

செம கடுப்பு
அவ்வப்போது நடிகைகளின் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் பார்வதி. இதனால் நடிகை பார்வதி மீது செம கடுப்பில் இருந்த நடிகர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓராண்டாக வாய்ப்பில்லை
இதன் காரணமாக கடந்த ஓராண்டாக எந்த புதிய படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் முடங்கியிருக்கிறார் நடிகை பார்வதி. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை பார்வதி, நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

பாலிவுட்டில் வாய்ப்பு
அந்த அமைப்பை உருவாக்கிய பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீடூவில் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

பார்வதி கவலை
ஆனால் மலையாள சினிமாவில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை என கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

கதைகள் தயார்
பட வாய்ப்புகள் கிடைக்காததால் இயக்குநராக அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறார் பார்வதி. இதற்காக இரண்டு கதைகளுடன் தயாராக உள்ளாராம் நடிகை பார்வதி.


Click it and Unblock the Notifications











