நான் இலியானா தங்கச்சி இல்ல... என் பேரு எரிக்கா
சென்னை: எரிக்கா பெர்னாண்டஸ்-ஐ முதன் முதலாக பார்க்கும் அனைவருமே கேட்கும் முதல் கேள்வியே, ' நீங்கள் இலியானாவின் தங்கையா?' என்பது தானாம்.
பார்ப்பதற்கு நடிகை இலியானாவை நினைவு படுத்தும் உடல் கட்டு, முகவெட்டோடு காணப்படுகிறார் நடிகை எரிக்கா.
555 படத்தில் பரத்தின் நாயகியாக களமிறங்கி இருக்கும் இந்த அழகு தேவதையிடம் இது பற்றி கேட்டப்பொழுது சிரித்துக்கொண்டே அது தனக்கு பெருமை தான் என்கிறார்.
இலியானாவின் தங்கை போல் இருப்பதாக எரிக்காவின் காது படவே பலர் பேசியிருக்கிறார்களாம். சிலர் அவரிடம் சந்தேகத்தோடு கேட்கவும் செய்கிறார்களாம்.

ரொம்ப பெருமையா இருக்கு...
இந்த உருவ ஒற்றுமை எரிக்காவிற்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறதாம். காரணம் இலியானா அழகாலும், திறமையாலும் இன்று பிரபலமான நடிகையாக வலம் வருவது தானாம். ஆனாலும், தான் எரிக்கா என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே இந்த அழகுப்பதுமை விரும்புகிறதாம்.

நா யாருனு அப்புறம் தெரியும்...
கைவசம் உள்ள 3 படங்களும் ரிலீசானவுடன் தன் நடிப்பைக் கண்டு ரசிகர்கள் தன்னை தனியாக அடையாளம் கண்டு கொள்வார்கள் என எரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நா ஹிந்தியிலும் கலக்கியிருக்கேன்...
ஹிந்தியில் எரிக்கா நடித்த ‘லவ் இஸ் நாட் மேத்தமெடிக்ஸ்' படத்தின் ரிலீசுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ‘ ஐ எம் கலாம்' டைரக்டர் நிலா மதாப் பாண்டாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிக்கும் பதுமை..
மும்பையைச் சேர்ந்த மங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட எரிக்கா 2012ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் பிரஸ் பேஸ் அவார்டைப் பெற்றவர். சிறுவயது முதலே கண்ணாடி முன் நின்று தனது அழகை தானே ரசித்துக் கொள்வாராம்.

விஜயசாந்தி மாதிரி வரணுமாம்...
தனக்கு ஆக்ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். எனவே ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பிருந்தால் கூறுங்கள் என இயக்குநர்களிடம் கேட்கிறாராம்.

பர்ஸ்ட் டமிழ்... அப்ரம் அப்டியே ஹிந்தி...
ஐஸ்வர்யா, பிரியங்கா, தியா மாதிரி வெற்றி பெறவே தமிழ் திரைஉலகப் பிரவேசத்தை தேர்ந்தெடுத்தாராம் எரிக்கா.


Click it and Unblock the Notifications











