நான் ஒண்ணும் சமந்தா கிடையாது.. இனிமே அப்படி நடிக்க ஆசை.. பெரிய குடும்பத்துப் பெண் அதிரடி முடிவு!

சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள இளம் நாயகி நிஹாரிகா கோனிடெலா ஓவர் கிளாமர் காட்டி நடிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நிஹாரிகா.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவின் மகள் தான் நிஹாரிகா கோனிடேலா என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிஹாரிகா கோனிடெலா. பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகளான நிஹாரிகா, ஒக்க மனசு, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பு

தயாரிப்பு

தந்தையை போல தயாரிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ள நடிகை நிஹாரிகா, 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் இந்த இளம் வயதிலேயே நடத்தி வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு நிஹாரிகா தயாரித்து நடித்த முடபாப்பு ஆவக்காய் வெப்சீரிஸ் அவரது திறமையை டோலிவுட் சினிமாவுக்கு அறியப்படுத்தியது.

ஆர்வம்

ஆர்வம்

வெப் சீரிஸ் மீது நிஹாரிகாவிற்கு இருக்கும் அதிகப்படியான ஆர்வம், தொடர்ந்து அவரை பல வெப்சீரிஸ்களை தயாரித்து நடிக்கவும் வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு Nanna Koochi வெப் சீரிஸில் தாராவாக நடித்து அசத்தியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான மேட் ஹவுஸ் வெப் சீரிஸில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

கிளாமருக்கு ரெடி

கிளாமருக்கு ரெடி

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழில் நிஹாரிகா அறிமுகமானாலும், முதல் படம் அவருக்கு இங்கு நன்றாக அமையவில்லை. அடுத்ததாக தமிழில் ஒரு செம ரொமான்டிக் லவ் ஸ்டோரியில் கிளாமருக்கு தாராளம் காட்டி நடித்து வருகிறாராம். அந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் கோவாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சமந்தா இல்லை

சமந்தா இல்லை

சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிஹாரிகா, தன்னால் நடிகை சமந்தாவை போல திருமணத்திற்கு பிறகும் இப்படி நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. திருமணத்திற்கு முன்பாக, எந்த அளவுக்கு திரையுலகில் கவர்ச்சி காட்டி நடித்து மார்க்கெட்டை உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில்

இன்ஸ்டா பக்கத்தில்

1.2 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள நடிகை நிஹாரிகா கோனிடேலா அவ்வப்போது, தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, வைரலாக்கி வருகிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சொந்தக்காரப் பெண்ணான நிஹாரிகா, தனது உறவினர்களான ராம் சரண், அல்லு அர்ஜுனா உள்ளிட்ட நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X