எந்த மச்சான்ஸாக இருந்தாலும் நான் ரெடி... நமீதாவின் அதிரடி!

சென்னை: நடிகர் யார் என்று நான் பார்ப்பதில்லை. அவர் சீனியரோ, ஜூனியரோ எனக்குக் கவலை இல்லை. ஜோடி போட்டு நடிக்க நான் ரெடி.. என்று அதிரடியாக கூறியுள்ளார் நமீதா.

நமீதாவை நிறையவே மிஸ் செய்கிறார்கள் நமது ரசிகர்கள். அவரும் முன்பு போல கலைச் சேவை செய்வதில்லை.

மானாட மயிலாட என்று போனவர் அப்படியே போய் விட்டார். புதுப் படம் எதிலும் நடிப்பதாகவே தெரியவில்லை.

அன்புள்ள அண்ணி...

அன்புள்ள அண்ணி...

எங்கள் அண்ணா படத்தில் அண்ணன் விஜயகாந்த்துக்கு ஜோடி போட்டு நடித்து அறிமுகமானவர் நமீதா. அந்தப் படத்தை இப்போது பார்த்தால் நம்ம நமீதாவா இது என்று ஆச்சரியப்படுவீர்கள்... அப்படி ஒரு பாந்தம்.

சரத்குமாருடன் சேர்ந்த நேரம்

சரத்குமாருடன் சேர்ந்த நேரம்

சரத்குமாருடன் சேர்ந்து நடித்த நேரம் நமீதா பிக்கப் ஆகி விட்டார். சரத்துடன் சாலக்குடி அருவியில் அவர் கவர்ச்சி காட்டி நடித்துப் படமாக்கப்பட்ட பாடல் இன்று வரை நமீதாவுக்கு, சரியான ஐடி கார்டாக இருக்கிறது.

சில்க்குக்கு நிகரானவர்

சில்க்குக்கு நிகரானவர்

சில்க் ஸ்மிதா எப்படி தனது கவர்ச்சியால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தாரோ அதேபோல நமீதாவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

அன்புள்ள மச்சான்ஸ்

அன்புள்ள மச்சான்ஸ்

நமீதாவை ரசிகர்கள் எப்படியெல்லாமோ அழைப்பார்கள். பதிலுக்கு நமீதா மச்சான்ஸ் என்று அழைத்து குஷிப்படுத்துகிறார். இப்போது அந்த மச்சான்ஸ், நமீதாவைக் காணமாமல் ஏங்கிப் போய் இருக்கும் நிலையில் நமீதா மீண்டும் களம் புகப் போகிறாராம்.

கடைசி இளைஞன்

கடைசி இளைஞன்

அரசியலில் முதுபெரும் தலைவரான கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான இளைஞன்தான் நமீதா நடித்த கடைசித் தமிழ்ப் படமாகும்.

வெயிட்டைக் குறைக்க பிரயத்தனம்

வெயிட்டைக் குறைக்க பிரயத்தனம்

தற்போது மீண்டும் நடிக்க தீர்மானித்துள்ளார் நமீதா. இதற்காக, தனது உடல் எடையை வெகுவாகக் குறைக்க முடிவு செய்துள்ளாராம். ஓவராக வெயிட்டாகிக் கிடக்கும் நமீதாவைப் பார்த்தால் சற்றே பயமாகத்தான் இருக்கிறது.

என் கிட்ட என்ன இல்லை...?

என் கிட்ட என்ன இல்லை...?

மீண்டும் திரைக்கு வருவது குறித்து நமீதா கூறுகையில், எனக்கு திறமையும் வயதும் இருக்கிறது. எனவே நான் கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன். இதற்காக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வருகிறேன்.

யாரா இருந்தாலும் பரவாயில்லை...

யாரா இருந்தாலும் பரவாயில்லை...

கதாநாயகன் யாராக இருந்தாலும் பரவாயில்லை. புதுமுகம், வயதில் மூத்த நடிகர்கள் என்றெல்லாம் பார்க்காமல் அவர்களுடன் ஜோடியாக நடிப்பேன் என்று கூறுகிறார் நமீதா.

சரத், சத்யராஜ், சுந்தர்.சி ஓரமா நில்லுங்க, பரத், சிம்பு, தனுஷ் ஆகியோர் டிரை பண்ணிப் பார்க்கலாமே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X