தாயாக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளேன்.. கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்!

சென்னை : இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த பழனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்

இப்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்

கடந்த 2020 ஆம் வருடம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் இப்பொழுது தாயாக தயாராகி வரும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிரபலம் அடையவில்லை

பிரபலம் அடையவில்லை

நடிகர் விஜய்க்கு பேக் டு பேக் ஹிட்டுகளை கொடுத்து மாஸ் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் பேரரசு. பரத் ஹீரோவாக நடித்த பழனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காஜல் அகர்வால் அறிமுகமானார். ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்திருந்த காஜல் அகர்வாலுக்கு பழனி திரைப்படம் வெற்றி பெற்றாலும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை.

தெலுங்கில் வசூலை அள்ளியது

தெலுங்கில் வசூலை அள்ளியது

எனவே சரோஜா, மோதி விளையாடு, பொம்மலாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ராம் சரண் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கில் பெரும் வசூலை அள்ளியது. மகதீரா தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. மிகப் பெரிய வெற்றியும் பெற்றது.

பாலிவுட்டிலும் பிரபலம்

பாலிவுட்டிலும் பிரபலம்

சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு காஜல் அகர்வால் முன்னணி கதாநாயகியாக மாறினார். மாற்றான், துப்பாக்கி,ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா,மாரி,பாயும்புலி, விவேகம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் காஜல் அகர்வால் இப்பொழுது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். ஹிந்தியிலும் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்.

தாயாக தயாராகி

தாயாக தயாராகி

க்யூட்டான நடிப்பு திகட்டாத கவர்ச்சி என ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020 கெளதம் கிச்லு மத்தியில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் இப்பொழுது தாயாக தயாராகி வருகிறார். கர்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்க புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X