நான் இப்போ மராத்தியில பிஸியா இருக்கேன்... தமிழுக்கு வருவேன் - நடிகை தேஜாஸ்ரீ

சென்னை: நான் இப்போது மராத்தி மொழிப்படங்களில் பிஸியான நடிகையாக இருக்கிறேன். மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன் என்று நடிகை தேஜாஸ்ரீ மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

நடிகை தேஜாஸ்ரீ 2003ஆம் ஆண்டில் து பால் பிரம்மச்சாரி மெயின் ஹூன் கன்யா குன்வரி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், அதற்கு பின்னர் அவருக்கு போதிய படவாய்ப்புகள் கிட்டவில்லை.

I am very busy in Marathi Films-Tejashree

இதனால் பெருத்த ஏமாற்றத்திலிருந்த தேஜாஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழில் முதன் முறையாக ஒற்றன் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு நடனமாடி மக்களிடையே பிரபலமானார்.

இப்படத்திற்கு பிறகே தேஜாஸ்ரீ தமிழ் சினிமாவில் பிரபலமானார். பின்பு இவர் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடித்த உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இடையில் பட வாய்ப்புகள் குறையவே, தமிழ், தெலுங்கு, மராத்திய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கில் மற்றும் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.

இதற்கு பின்பு மதுர, கோடம்பாக்கம், அது ஒரு கனாக்காலம், கள்வனின் காதலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இவை அனைத்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ் படங்களிலும் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலுவுக்கு ஜோடியானார்.

தமிழில் போதிய படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்த வேளையில், ஒரு சில படங்களில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடும் வாய்ப்பே தொடர்ந்து கிடைத்து வந்தது. கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் இவரும் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வந்தார். இவருக்கு கதகளி, குச்சுப்புடி முதல் மேற்கத்திய நடனம் வரை அனைத்தும் அத்துப்படி.

தமிழ் சினிமாவில் போதிய படவாய்ப்புகள் இல்லாதது குறித்து நடிகை தேஜாஸ்ரீ கூறுகையில், 'இப்போது, மராத்தி மொழி திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறேன். விரைவில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் நுழைந்து முத்திரை பதிப்பேன் என்று கூறியுள்ளார். இவரது வருகைக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X