நடிப்பு விஷயத்தில் நான் பேராசை பிடித்தவள்: வித்யா பாலன்
மும்பை: நடிக்கும் விஷயத்தில் நான் மிகவும் பேராசை பிடித்தவள் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
வித்யா பாலன் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளார். பாலிவுட் நடிகைகள் ஒல்லிக்குச்சியாக உடம்பு வைத்திருக்கையில் வித்யா பூசினாற் போன்று உள்ளார்.
அவர் பஞ்சாபி பெண்ணாக நடித்த கன்சக்கர் படம் அண்மையில் வெளியானது. அதில் வித்யா குண்டான பெண்ணாக, வித்தியாசமான உடைகளில் வந்தார்.

வசூல் இல்லை
கன்சக்கர் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் படத்தில் வித்யாவின் நடிப்பு வெகுவான பாராட்டைப் பெற்றது.

நடிகையாவதே கனவு
நடிகையாவதே தனது கனவு என்றும், அது பளித்துவிட்டது என்றும் வித்யா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு
நான் படங்களை தாயாரிக்க விரும்பவில்லை. என் வீட்டில் தான் ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் இருக்கிறாரே என்று வித்யா தெரிவித்துள்ளார். வித்யாவின் கணவரும், யுடிவி தலைவருமான சித்தார்த் ராய் கபூர் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசைக்காரி
நடிப்பு விஷயத்தில் தான் ஒரு பேராசைக்காரி என்று வித்யா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











