நான் இன்னும் கன்னி கழியாத பொண்ணு... ராக்கி சாவந்த் பரபரப்பு தகவல்
மும்பை: தான் ஒரு கன்னிப் பெண் என்று அதிரடியாக கூறியுள்ளார் கவர்ச்சிக் கன்னி ராக்கி சாவந்த்.
தனது குடும்பம் கட்டுப்பெட்டியான குடும்பம் என்றும், அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த தான் எந்த் தவறும் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
தனக்கு காதலர் இருந்தாலும் கூட இதுவரை கன்னி கழியவில்லை என்றும் அவர் சொல்கிறார். இதுதொடர்பாக ராக்கி அளித்துள்ள ஒரு பேட்டியி்ல கூறியிருப்பதாவது....

நடுத்தரக் குடும்பப் பெண்
நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். எனது வீட்டில் மிகவும் கட்டுப்பெட்டியாக இருப்பார்கள்.

எங்கப்பா போலீஸ்கார்...
எனது தந்தை ஒரு போலீஸ்காரர். எது செய்தாலும் திருமணத்திற்குப் பிறகு செய் என்று எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். நான் அவரது அறிவுரையை மீறியதே இல்லை.

அப்புறம்தான்...
திருமணம் செய்து கொண்டு என் கணவருடன்தான் நான் உல்லாசமாக இருப்பேன். அதுவரை எந்தவிதமான செயலிலும் ஈடுபட மாட்டேன்.

அப்ப பாய் பிரண்ட் அபிஷேக் அவஸ்தி...
அபிஷேக் அவஸ்தி எனது பாய் பிரண்டாக இருந்தவர்தான். ஆனாலும் நாங்கள் எல்லை கடந்ததில்லை. எனக்கு செக்ஸில் வெறியெல்லாம் கிடையாது.

இப்பக் கூட ரெடியா இருந்தாலும்...
ஒருவேளை இப்போது செக்ஸ் வைத்துக் கொள்ள நான் நினைத்தாலும் கூட எனக்கேற்ற ஒரு ஆண் கூட இங்கு இல்லை.

சரியான ஆம்பளை வரட்டும்
எனக்கேற்ற சரியான ஆண்மகனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்புறம்தான் எல்லாம்.

மக்களுக்கு ஆச்சரியம் வரலாம்
நான் கன்னித்தன்மையுடன் இருப்பது குறித்து மக்கள் ஆச்சரியப்படலாம். காரணம், நான் ஒரு சினிமாக்காரி என்பதால். ஆனால் உண்மை அதுதானே.. அதை எப்படி மறைக்க முடியும்.

செக்ஸ் மட்டும் முடியவே முடியாது
நான் கடுமையான உழைப்பாளி. அதை மட்டுமே என்னிடம் எதிர்பார்க்க முடியும். செக்ஸ் குறித்து மூச்... ஒரு வேளை நான் அதில் விருப்பப்பட்டாலும்.. கூட அது நானே விரும்பி செய்தால்தான் உண்டு. சான்ஸ் பிடிக்க செக்ஸை நான் பயன்படுத்த மாட்டேன் என்றார் ராக்கி.


Click it and Unblock the Notifications











