நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் 'சி.எம்.' ஆகிடுவேன், ஆனால்..: ஹேமமாலினி #HemaMalini

By Siva

ஜெய்பூர்: நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல்வர் ஆகிவிடுவேன் என்று நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி கூறியதை கேட்டு தான் பலரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடனம் ஆடினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முதல்வர்

முதல்வர்

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல்வர் ஆகிவிடுவேன். ஆனால் எனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை. ஏன் என்றால் முதல்வர் ஆனால் என்னால் சுதந்திரமாக இருக்க முடியாது. என் சினிமா பயணத்தால் தான் என்னை பலருக்கும் தெரியும். ட்ரீம் கேர்ள் அல்லது ஹேமமாலினி என்றால் அனைவருக்கும் தெரியும்.

மோடி

மோடி

மதுரா தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்த நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவர் போன்று ஒரு பிரதமர் கிடைப்பது கடினம். பிற கட்சி தலைவர்கள் அவரை பற்றி குறை கூறலாம். ஆனால் இந்த நாட்டிற்காக அதிகம் உழைத்தது யார் என்று பார்க்க வேண்டும் என்றார் ஹேமா.

கிண்டல்

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல்வர் ஆகிவிடுவேன் என்று ஹேமமாலினி கூறியதை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டர்

ஹேமமாலினி பேட்டி கொடுத்ததும் கொடுத்தார் அவர் பெயர் ட்விட்டரில் டிரெண்டாகிவிட்டது. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X