எமி ஜாக்சனுக்கு தமிழ் பேச கற்றுக் கொடுத்த ஷங்கர்
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசக் கற்றக் கொண்டிருக்கிறேன். விரைவில் நன்றாக தமிழ் பேசுவேன் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் ஷங்கரின் 'ஐ' பட நாயகி எமி ஜாக்சன்.
லண்டன் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டணம் படத்தில் அறிமுகமானவர். பின்னர் தாண்டவம் படத்தில் நடித்தார். இரண்டு படங்களிலுமே ஓரளவு சமாளித்தார். ஏனென்றால் அதில் தமிழ் வசனங்களை அவ்வளவாக பேசவில்லை.
ஆனால் ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்சன் தமிழ் வசனங்கள் பேச சிரமப்படுகிறாராம். இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும்தான் எமிக்கு தமிழ் வசனம் பேச கற்றுக் கொடுக்கின்றனராம்.

காதல் காட்சிகள் ஈசி
ஐ படத்தில் பாடல் மற்றும் காதல் காட்சிகளில் வசனம் குறைவு என்பதால் அதனை சுலபமாக சமாளித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சென்டிமென்ட் காட்சிகளில் உணர்ச்சிகரமாக பேச வேண்டி இருப்பதால் அந்த இடத்தில் சிரமப்படுகிறாராம்.

மனப்பாடம் செய்யும் எமி
முதல் நாளே எமிக்குத் தேவையான வசனங்களை உதவி இயக்குநர்கள் ஆங்கிலத்தில் எழுத்தி கொடுத்துவிடுகின்றனர். அதனை படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பாகவே மனப்பாடம் செய்துவிட்டுதான் எமி ஜாக்சன் நடிக்க வருகிறார். ஆனால் அதையும் சரியாக பேசாமல் திணறுகிறாராம்.

கொஞ்சம் சவால்தான்
வசனங்கள் பேசுவது எனக்கு சவாலாக இருக்கிறது என்று கூறும் எமி, ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உதவியால் தப்பில்லாமல் பேச முடிகிறது. நிறைய விஷயங்களை ஐ படப்பிடிப்பில் கற்றுக்கொண்டேன் என்கிறார். இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் அதற்குள் நன்றாக தமிழ் பேசக் கற்றுக்கொள்வேன் என்றும் கூறினார்.

டான்ஸ்ல அசத்தியிருக்கேன்
வசனம் பேசத்தான் சிரமப் பட்டேனே தவிர ரஹ்மான் இசைக்கு நன்றாக நடனமாடியிருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். இதில் என்னுடைய பல அவதாரங்களை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றார் எமி.

பிகினி போடலையே
தெலுங்குப் படத்தில் ராம் சரண் தேஜா உடன் பிகினி போட்டு நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அது பற்றி கூறிய எமி, நான் கவர்ச்சியாக பிகினி போட்டு நடிக்கவில்லை. ஆனால் பீச்சில் அணியும் உடை அணிந்து நடித்திருக்கிறேன் என்றார்.

விக்ரம் – ஷங்கர்
நண்பன் படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ'. அந்நியன் படத்திற்குப் பிறகு, இயக்குனர் ஷங்கர், விக்ரம் இந்த படத்தில் இணைந்து பணி புரிகிறார்கள். படத்தை ஆஸ்கர் பிலிமிஸ் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படதிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விக்ரம் உடன் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











