Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும்: பிரியங்கா சோப்ரா
மும்பை: படங்களில் தன்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா நடிகர் ஷாஹித் கபூரை காதலித்து பிரிந்துவிட்டார். இவர்கள் இருவரும் பிரிவதும், சேர்வதும் பல முறை நடந்துள்ளது. இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நெருக்கம் என்று பாலிவுட்டில் பெரும் பேச்சாக இருந்தது.
பிரியங்காவால் ஷாருக்கானுக்கும், அவரது மனைவி கௌரிக்கும் இடையே பிரச்சனை என்று எல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிலிம்பேர் விருதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியங்கா கலந்து கொண்டார்.
லேட்டா வந்த பிரியங்கா
பத்திரிக்கையாளர் சந்திப்பு இரவு 7.30 மணிக்கு துவங்கவிருந்தது. ஆனால் பிரியங்கா காலதாமதமாக வந்ததால் இரவு 9 மணிக்கு தான் சந்திப்பு துவங்கியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தான் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.
மன்னிப்பு
நான் இதற்கு முன்பு காலதாமதமாக வந்துள்ளேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வருகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் பிரியங்கா.
விருது விழா
59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்கள். முதல் முறையாக விருது விழாவை தொகுத்து வழங்குவதால் பிரியங்கா சற்று பதட்டமாக உள்ளார்.
ஷாருக்கான்
ஷாருக்கானும் பிரியங்காவும் சேர்ந்து டான் மற்றும் டான் 2 ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரீல் வாழ்க்கையில் காதல், காமெடியில் கலக்கும் ஷாருக்கும், பிரியங்காவும் ஜோடியாக விழாவை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிரியங்கா கூறுகையில், அது என்ன ஷாருக், என்னால் யாரையும் படத்தில் ரொமான்ஸ் செய்ய முடியும். அது என் தொழில் என்றார்.