அந்த படம் ஓடாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கினேன்: தனுஷ் நாயகி பேட்டி
Recommended Video

மும்பை: ஹிட்டாகும் என்று நினைத்த படம் ஓடாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கியதாக நடிகை அமிரா தஸ்துர் தெரிவித்துள்ளார்.
இஷாக் இந்தி படம் மூலம் நடிகையானார் அமிரா தஸ்துர். முதல் படம் ஓடாத நிலையில் தனுஷுடன் சேர்ந்து அனேகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த மிஸ்டர் எக்ஸ் இந்தி படம் பிளாப் ஆனது.
தொடர்ந்து இரண்டு இந்தி படங்களும் ஓடாமல் போனதால் வேதனை அடைந்தார் அமிரா. பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அமிரா கூறியதாவது,

நடிகை
இஷாக் படம் ஓடாத போதிலும் நான் நல்ல நடிகை என்று அனைவரும் தெரிவித்தனர். அதனால் எனக்கு அப்போது வருத்தம் இல்லை. நடிப்போ, மாடலிங்கோ தொடர்ந்து வேலை செய்தால் போதும் எனக்கு. பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றிய எதிர்பார்ப்பை ஓரங்கட்டிவிட்டேன்.

எதிர்பார்ப்பு
மிஸ்டர் எக்ஸ் படம் நன்றாக ஓடும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் ஓடவில்லை. அதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். என் பெற்றோர் என்னை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றனர்.

முடக்கம்
என் மனம் மாற வேண்டும் என்று நினைத்து தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து வந்த பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்மிற்கு கூட செல்லவில்லை. எனக்கு பிரேக் தேவைப்பட்டது. அதன் பிறகு மாடலிங் செய்யத் துவங்கினேன். மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்ததில் வருத்தம் இல்லை.

அழுகை
என் பெரிய பிளஸ் பாயிண்டே அழுகை. ஊ என்றால் அழுதுவிடுவேன். ஆனால் திரையில் ரொமான்ஸ் செய்ய வருவது இல்லை. காதல் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. அதனால் திரையில் போலியாக நடிப்பது கடினமாக உள்ளது.

மாட்டேன்
படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஓவராக என் உடலை எக்ஸ்போஸ் செய்ய மாட்டேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். என் தந்தை என்னை அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டார். இருப்பினும் அவரை வேதனைப்படுத்தும் எதையும் நான் செய்ய மாட்டேன் என்கிறார் அமிரா.


Click it and Unblock the Notifications











