அந்த சம்பவத்திற்கு அப்பறம்.. 2 நாள் எனக்கு தூக்கமே வரல.. காரணம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Recommended Video
சென்னை: கடந்த 2 நாட்களாக தான் தூங்காமல் தவித்த காரணத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இன்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை கச்சிதமாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு காக்கா முட்டை படம் பெரிய அடையாளம் கொடுத்தது.
காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம், கனா ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இவர் மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.

இந்தியன் 2 படம்
சங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் "இந்தியன் 2 ". இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால் அதன் பிறகு, இந்த படத்தில் அவர் ஒப்பந்தமாகி பின் விலகி விட்டார் என்று நிறைய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

உண்மை தான்
இந்நிலையில் இந்தியன் 2 படத்திலிருந்து நான் விலகிவிட்டதாக சொல்லும் செய்தி, உண்மை தான் என்று பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது பற்றி அந்த பேட்டியில் அவர் மேலும் கூறும் பொழுது, டிசம்பர் மாதத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அவர்கள் திடீரென ஆகஸ்டு மாதம் கால்ஷீட் கேட்டனர். மிகவும் தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் தான் படப்பிடிப்பு ஆரம்பித்தது.

ஆனால் என்ன?
ஆகஸ்டு மாதம் நான் வேறு சில படங்களில் கமிட் ஆகி இருந்தேன். அந்த படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்றது. இதனால் தேதி பிரச்சனை காரணமாகவும் "இந்தியன் 2 " படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு இது பெரிய வருத்தம் தருகிறது.

சினிமா இல்லாது
பெரிய சினிமா பின்புலம் இன்றி திரை துறைக்கு நுழைந்த எனக்கு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. சங்கர், கமல்ஹாசன் என்ற இரண்டு ஜாம்பவான்கள் இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனது மிகப்பெரிய வருத்தம். இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.

2 நாட்களாக தூங்கவில்லை
இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனததற்காக 2 நாட்களாக தூங்காமல் கஷ்டப்பட்டேன். அந்த கவலையில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆனது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











