“என்னைவிட சின்னப்பையன்.. 9ம் வகுப்பு மாணவனோடு டேட்டிங் போனேன்”.. செம ஷாக் கொடுத்த யாஷிகா!

பள்ளிப் பருவத்தில் தன்னை விட வயது குறைந்த மாணவரோடு டேட்டிங் சென்றதாக யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

Recommended Video

மேக்கப் போடா 3 மணி நேரம் ஆகும்- யாசிகா ஆனந்த் பேச்சு- வீடியோ

சென்னை: தன்னைவிட வயதில் இளைய வயது பையனுடன் டேட்டிங் செய்ததாக நடிகை யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். அந்த சீசனில் டைட்டில் வின்னராக வரும் அளவிற்கு அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா நிறைய படங்களில் நடித்து வருகிறார். ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் ஆகிய படங்கள் தவிர, அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜாம்பி.

டேட்டிங்

டேட்டிங்

தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்றி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தன்னுடன் வயதில் சிறிய பையனுடன் டேட்டிங் சென்றதாகக் கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் யாஷிகா.

தாடி வேணும்

தாடி வேணும்

இதுகுறித்து அவர் கூறுகையில், "பசங்க என்னை இம்பிரஸ் செய்ய வேண்டுமானால் நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும். நல்ல உயரமாக இருக்க வேண்டும். தாடி இருக்க வேண்டும். டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்

பள்ளி மாணவர்

என்னைவிட சின்ன பையனை டேட் செய்திருக்கிறேன். நான் பள்ளியில் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது 9ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் டேட்டிங் சென்றேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கஷ்டமான வேலை

கஷ்டமான வேலை

நான் காலையில் லேட்டாக தான் எழுவேன். பிறகு குளித்து கிளம்புவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன். காலையில் குளிப்பதென்றால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இரவு நேர படப்பிடிப்பை தான் பெரும்பாலும் விரும்புவேன்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

எனக்கு விஜய் தேவரகொண்டாவை மிகவும் பிடிக்கும். தெலுங்கு சினிமா உலகில் இருந்து யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் எனக் கேட்டால் அவரைத்தான் சொல்வேன். தமிழ் சினிமாவில் எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை", என யாஷிகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X