சினிமாவில் அந்த விஷயத்தை நினைச்சா எனக்கு மகிழ்ச்சிதான்.. சொல்கிறார் பிரபல ஹீரோயின் இஷா குப்தா
மும்பை: தனக்கு சினிமாவில் காட்பாதர் என்று யாரும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.
Recommended Video
பிரபல இந்தி நடிகை இஷா குப்தா. ஜன்னத் 2, அக்ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் கலக்கியுள்ளார்.
மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார்.

சிங்கப்பூர் போலீஸ்
தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ள இஷா, டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இப்போது REJCTX2 என்ற வெப் தொடரில் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

லாக்டவுன் நேரத்தில்
ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் ( Manuel Campos Guallar) என்பவரை காதலித்து வரும் இஷா, அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலித்து வருவதாகச் சொல்லி இருந்தார்.

காட்பாதர்
இதற்கிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சினிமாவில் காட்பாதர் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 'சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் நான் எங்கிருந்து சினிமாவில் என் கேரியரை ஆரம்பித்தேன் என்பதை திரும்பிப் பார்த்துக் கொள்வேன். சினிமாவில் எனக்கு காட்பாதர் என்று யாரும் இருந்ததில்லை.

அதிர்ஷ்டசாலி
ஒவ்வொரு நாளும் சினிமாவில் சாதிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது நான் அதிர்ஷ்டசாலி என்றே உணர்கிறேன். நடித்த படங்கள் தோல்வி அடையும்போது வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதுவும் என் பயணத்தில் ஒரு பகுதி என நினைக்கிறேன். தோல்விகளில் இருந்து பாடம் கற்கிறோம். நானும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











