நடிகருக்கு மகளாக பிறந்தது என் குத்தமா?: கேட்கிறார் வாரிசு நடிகை
மும்பை: சினிமா குடும்பத்தில் பிறந்தது தன் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சாரா அலி கான்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையானார். கேதர்நாத் படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து வெளியான சிம்பா ரூ. 196 கோடி வசூல் செய்துள்ளது.
சிம்பா படம் விரைவில் ரூ. 200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பா
சாரா கடந்த ஆண்டு தான் நடிகையானார். ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. சாரா நடிப்பதற்காகவே பிறந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சாராவின் வெற்றியை பார்த்து அவரின் தாயும், நடிகையுமான அம்ரிதா மகிவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

சயிப்
சினிமா குடும்பத்தில் பிறந்ததற்கு நான் கொடுத்து வைத்துள்ளேன். அதனால் சிம்பா மற்றும் கேதர்நாத் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் வாரிசு நடிகை என்பதால் மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் அம்மா, அப்பாவை மிகவும் பிடிக்கும். இருப்பினும் பெற்றோரை நாம் தேர்வு செய்வது இல்லை என்கிறார் சாரா.

விமர்சனம்
பெற்றோரை தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் செய்திருக்கலாம். ஆனால் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான துவக்கம் ஏற்படுகிறது. ஆனால் வாரிசு நடிகை என்பதால் லேசாக எடுத்துக் கொண்டு விமர்சிப்பது சரி இல்லை. நாம் சிறப்பாக நடித்தால் நம் வேலை நமக்கு பெருமை தேடித் தரும் என்று சாரா தெரிவித்துள்ளார்.

வாரிசுகள்
பாலிவுட்டில் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள். வாரிசுகளுக்கு தான் பாலிவுட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திறமை இருந்தாலும் வெளி ஆட்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். அதன் பிறகே வாரிசுகள் குறித்த பேச்சு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











