நான் முத்தம் கொடுக்கவே 6 மாதமாகும்.. வீணா மாலிக்
எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் உள்ளனர். ஆனால் அத்தனை பேருடனும் நான் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை என்று வீணா மாலிக் கூறியுள்ளார்.
தனது பாய் பிரண்டுகள் குறித்தும், ஆண் தோழமைகள் குறித்தும் ஒரு ஆங்கில நாளதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் வீணா மாலிக்.
தனக்கு நிறைய உறவுகள் இருப்பதாக கூறியுள்ள வீணா, ஆனால் அத்தனையும் படுக்கை அறை உறவுகள் என்று கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீணா அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம்
எனக்கு நிறைய உறவுகள்.. ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு, முக்கியத்துவம் உண்டு.

புரிஞ்சுக்க நேரம் போதாது
நிறைய உறவுகள் இருக்கின்றன என்றால், ஒவ்வொரு உறவையும் புரிந்து கொள்ளவே கால அவகாசமாகிறது. இதனால்தான் பெரும்பாலான உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்நிலை ஏற்படுகிறது.

ஒரு வருஷத்துக்கு அது கிடையாது...
நான் ஒருவருடன் பழக ஆரம்பிக்கும்போது, ஒரு வருட காலத்திற்கு அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டேன்.

முத்தம் கொடுக்கவே 6 மாதமாகும்
அதை விட முக்கியம், அவருக்கு நான் முத்தம் கொடுக்கவே 6 மாதம் அவகாசம் எடுத்துக் கொள்வேன்.

எல்லோருடனும் படுக்கை ஷேர் கிடையாது
எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் அத்தனை பேருடனும் நான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில்லை. என்னை யாரும் ஈஸியாக படுக்கையில் வீழ்த்தி விட முடியாது...

நம்பிக்கையும், விசுவாசமும் முக்கியம்
என்னுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு முக்கியத் தகுதியே, நம்பிக்கையும், விசுவாசமும்தான். என்னை நீங்கள் மதிக்காவிட்டால், என்னுடன் நட்பும், உறவும் கொண்டு என்ன புண்ணியம்...

என்னைக் கட்டுப்படுத்தினால் அவ்வளவுதான்...
என்னைக் கட்டுப்படுத்தும் ஆண்களையும், என்னை உளவு பார்க்கும் ஆண்களையும் நான் கட்டோடு வெறுக்கிறேன்.

மதித்தால் மதிப்பேன்...
என்னை மதித்தால் நான் அதை விட இரட்டிப்பு மரியாதை கொடுப்பேன். நான் மிகச் சாதாரணமான பெண் என்றார் வீணா மாலிக்.


Click it and Unblock the Notifications











