எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கென்ன?: முன்னணி ஹீரோயின் பேட்டி
மும்பை: எனக்கு விருது மீது நம்பிக்கை இல்லாததால் எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கு என்ன என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
29 வயதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 3 தேசிய விருதுகளை வாங்கிவிட்டார். கங்கனாவை ஒப்பந்தம் செய்தால் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என பெயர் வாங்கியுள்ளார்.
அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோராவுக்காக ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தார்.

விருது விழாக்கள்
நான் விருது விழாக்களுக்கு செல்வது இல்லை. ஏனென்றால் எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை என ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

சோனம் கபூர்
சிறந்த நடிகைக்கான விருதுக்கு ஆலியா பட், சோனம் கபூரில் யார் தகுதியானவர் என்று கங்கனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் நடுவர் இல்லை. யாருக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது என் வேலை இல்லை என்றார்.

விருது
ஆலியா, சோனம் கபூர் யார் விருது வாங்கினால் எனக்கென்ன? எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கும் போது யாருக்கு விருது கிடைத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றார் கங்கனா.

ஃபேஷன் ஷோ
இந்த ஆண்டு என் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அப்படி இருக்கும்போது மனிஷுக்காக ராம்ப் வாக் செய்தது எனக்கு சாதனையே. எனக்கு பிடித்த இந்திய டிசைனவர் மனிஷ் அரோரா. அவருக்காக ராம்ப் வாக் செய்த முதல் நடிகை நான் என கங்கனா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











