காதலர் தினத்தில் நம்பிக்கையில்லை: தீபிகா படுகோனே
காதலர் தினம், மகளிர் தினத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
பிரபல ஃபேஷன் வார இதழான வோக் நடத்திய விழாவில் பங்கேற்ற அவர், பெண்களை முன்னேற்றுவதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவோ கொண்டாடப்படுவதாக கூறப்படும், மகளில் தினத்திலோ, காதலர் தினத்திலோ தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

தான் ஒருபோதும் மகளிர்தினமோ, காதலர் தினமோ கொண்டாடியதில்லை என்று கூறிய அவர், இதுபோன்று ஒரே ஒருநாள் கொண்டாட்டங்களில் தனக்கு நம்பிக்கை என்று கூறினார். எனவேதான் இந்த நாட்களை தான் கொண்டாட விரும்பியதில்லை என்றும் கூறினார்.
பெண்கள் தினந்தோறும் தன்னம்பிக்கையோடு உணரவேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் முன்னேறுவார்கள். பெண்கள் தங்களின் தன்னம்பிக்கையை உணர ஆரம்பித்தால் அச்சம் ஏற்படாது. தினம் தினம் மகிழ்ச்சியாக நாட்களைக் கொண்டாடலாம் என்றும் தீபிகா படுகோனே கூறினார்.


Click it and Unblock the Notifications











