சூர்யாவா, லிங்குசாமியா, யார் அவங்க எல்லாம்: அதிர்ச்சி அளித்த கரீனா கபூர்
மும்பை: சூர்யா என்றால் யார் என்றே தனக்கு தெரியாது என பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் மூலம் இத்தனை காலமாக கோலிவுட் பக்கம் வராத பாலிவுட் நடிகை கரீனா கபூர் தமிழ் திரையுலகிற்கு வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.
அஞ்சான் படத்தில் கரீனா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கரீனா கபூர் கூறுகையில்,

அஞ்சான்
இது போன்ற ஆதாரமில்லாத கதைகள் எங்கிருந்து தான் வருகிறதோ. அஞ்சான் படத்திற்காக நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை.

சூர்யா
சூர்யா, லிங்குசாமி ஆகியோர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு இந்தி அல்லாத பிற மொழிப் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அது தென்னிந்திய மொழிப்படமாக இருக்கட்டும், ஹாலிவுட்டாக இருக்கட்டும்.

மொழி
தெரியாத மொழிப் படங்களில் என்னால் எப்படி உணர்ச்சிகரமாக நடிக்க முடியும். ஆனால் தென்னிந்திய மொழிகள், மராத்தி மற்றும் பெங்காளி படங்கள் எனக்கு பிடிக்கும். அந்த படங்களில் நடிக்க முதலில் நான் மொழிகளை கற்க வேண்டும் என்றார்.

என்ன கரீனா?
சூர்யா நடித்த கஜினி தான் இந்தியில் ரீமேக்காகி சூப்பர் ஹிட்டானது. இந்தி கஜினி ஹீரோவான ஆமீர் கான் சூர்யாவின் நடிப்பை பாராட்டி பேட்டி அளித்தார். இவ்வளவு ஏன் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் கரீனா நடிக்கிறார். அப்படி இருந்தும் சூர்யா என்றால் யார் என்றே தெரியாது என்கிறாரே.


Click it and Unblock the Notifications











