»   »  பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன், தம், தண்ணி நோ நோ நோ: சிம்பு நாயகி

பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன், தம், தண்ணி நோ நோ நோ: சிம்பு நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கம் இல்லை என நடிகை நீத்து சந்திரா தெரிவித்துள்ளார்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நடிப்பில் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ராதிகா, ஜோதிகா என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் நீத்து சந்திரா.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளார்.

சிம்பு

சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 4 கதாபாத்திரங்களில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நீத்து சந்திராவும் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான். சத்தான உணவுகளை சாப்பிடுவேன். பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கம் கிடையாது. மது, புகைப்பிடிக்கும் பழக்கமும் இல்லை என்கிறார் நீத்து.

சுசித்ரா

சுசித்ரா

திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டிகளில் எடுக்கப்பட்ட சில கசமுசா புகைப்படங்களை பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கமே இல்லை என நீத்து தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

பெண்கள் தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நீத்து தெரிவித்துள்ளார்.

English summary
Actress Neetu Chandra said that she doesn't go to parties. She added that she doesn't smoke or consume alcohol.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil