டேட்ஸ், கமல் படம், காதல்: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்
மும்பை: அப்பா கமல் ஹாஸனின் படத்தில் நடிக்க டேட்ஸ் இல்லை என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாஸன் தனது அப்பா கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் டேட்ஸ் இல்லையாம்.
அப்பா கேட்டும் டேட்ஸ் இல்லை என்று ஸ்ருதி சொல்கிறாரே ஒரு வேளை அவர்களுக்குள் பிரச்சனையோ என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.

ஓவர் பிசி
ஸ்ருதி தற்போது கப்பார் மற்றும் வெல்கம் பேக் ஆகிய 2 இந்தி படங்கள், ரேஸ் குர்ரம் என்ற தெலுங்கு படம் மற்றும் பெயரிடப்படாத தமிழ் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஓடியோடி உழைப்பு
ஒரு கேரவனில் இருந்து மற்றொன்றுக்கு ஓடுவது தான் தற்போது என் வாழ்க்கை. எனக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை தற்போது இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

லீவே இல்லை
புத்தாண்டின்போது இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தது தான், அதற்கு பிறகு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது என்றார் ஸ்ருதி.

அப்பா
என் அப்பா தன் படத்தில் நடிக்குமாறு கூறி அண்மையில் என்னை சந்தித்து பேசினார். ஆனால் என்னிடம் டேட்ஸ் இல்லை. என்ன செய்வது என்று ஸ்ருதி கூறினார்.

காதல்
காதல் செய்ய நேரமே இல்லை. ஹாலிவுட் நடிகரான ரயன் கோஸ்லிங்கே வந்து என்னை வெளியே அழைத்துச் செல்ல கேட்டாலும் நான் என் இயக்குனர்களிடம் தான் கேட்டுவிட்டு செல்ல வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











