கணவரிடம் வரலட்சும் இப்படி நடந்துகொள்வாரா?.. என்ன மேடம் இதெல்லாம்?.. நியாயமே இல்லை

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி மும்பையை சேர்ந்த் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே நிக்கோலாய் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டு பேரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் தனது கணவரிடம் எப்படி நடந்துகொள்வேன் என்பது குறித்து வரலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்திருக்கிறார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி திரைத்துறைக்குள் வந்தபோது; அவரும் விஷாலும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதனை அவர்கள் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. ஆனால் நடிகர் சங்க பிரச்னையில் சரத்துக்கும், விஷாலுக்கும் முட்டிக்கொண்டதால் அந்தக் காதல் பாதியிலேயே முடிந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது. அதனையும் வரு ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. சூழல் இப்படி இருக்க அவர் விஷாலை காதலிக்கவில்லை; மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவை காதலிக்கிறார் என்று பின்னர் உறுதியானது.

I Don t Know How to Receive Gifts Varalakshmi s Cute Confession Wins Hearts
Photo Credit:

கோலாகலமான திருமணம்: நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இருப்பினும் இரண்டு பேரின் காதலும் ரொம்பவே ஆழமானது என்று உணர்ந்த சரத்; அவர்கள் திருமணத்துக்கு க்ரீன் சிக்னல் காண்பித்தார். இதனையடுத்து தாய்லாந்தில் வைத்து அவர்களுக்கு சில வருடங்கள் முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் சரத்தின் முதல் மனைவி சாயா, இரண்டாவது மனைவி ராதிகா; பிள்ளைகள், சொந்தங்கள் என அனைவருமே கலந்துகொண்டு வருவை வாழ்த்தினார்கள்.

Also Read
விஜய் மேனேஜர் தாவூத் இப்ராஹிம் தம்பியா?.. என்னங்க இப்படி சொல்றீங்க?.. போட்டு தாக்கிய பிரபலம்
விஜய் மேனேஜர் தாவூத் இப்ராஹிம் தம்பியா?.. என்னங்க இப்படி சொல்றீங்க?.. போட்டு தாக்கிய பிரபலம்

நடிப்பில் பிஸி: திருமணத்துக்கு பின்பும் நடிப்பதில் ஆர்வமாகவே இருக்கிறார் வரலட்சுமி. கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் ஃபீனிக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அடுத்ததாக ஆங்கிலம், தமிழ், அரபியில் உருவாகும் ரைசானா ஏ கேஜட் பேர்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இதற்கிடையே எஸ் சரஸ்வதி என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார்.

அதிலும் தோல்விதான்: ஆனால் இயக்குநராகவும் அவரால் வெல்ல முடியவில்லை. வரலட்சுமியை பொறுத்தவரை மிகச்சிறந்த நடிகை என்று எப்போதோ பெயர் எடுத்துவிட்டார். என்ன மாதிரியான ரோலை கொடுத்தாலும் அவர் அசால்ட்டாக செய்யக்கூடியவர்தான். இருந்தாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வருவின் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு கடைக்குள் நான் சென்றால்; ஒரு விஷயத்தை எனக்கு சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் பழக்கம். திடீரென எனது கணவர் கிஃப்ட் கொடுத்தால் அவரது முகத்தை பார்ப்பேன். ஏன் இவ்வளவு கேவலமான ரியாக்ஷன் என்று தோன்றும். அதேபோல், நீ கிஃப்ட் கொடுக்கும்போது என்னுடைய கேவலமான ரியாக்ஷனை பார்த்து ஃபீல் செய்யாதே. அதை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை. அதுதான் உண்மை என சொல்வேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X