கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை!
மும்பை: லாக்டவுன் முடிந்து ஷூட்டிங்கை எப்போது தொடங்குவார்கள் என்று தெரியவில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்திருந்தவர் இந்தி நடிகை யாமி கவுதம்.
அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய், சந்தானம் நடித்த தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆக்ஷன் ஜாக்சன்
இதையடுத்து, தமிழில் நடிக்காத யாமி கவுதம் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு, அஜய் தேவ்கனின் ஆக்ஷன் ஜாக்சன், உரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக், சர்கார் 3, பாலா உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து கின்னி வெட்ஸ் சன்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

கொரோனா தடுப்பு
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும், கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

யாமி கவுதம்
இந்நிலையில், நிறுத்தப்பட்டுள்ள சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகை யாமி கவுதம். லாக்டவுனுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறும்போது, 'படங்களின் பட்ஜெட் விஷயங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும். செலவுகளை குறைப்பதற்கான வழிகளை பார்க்கவேண்டும்.

டிஜிட்டல் தளங்கள்
மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று தெரியாது. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு டிஜிட்டல் தளங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் தளங்களுக்கான படங்களில் நடிக்க எனக்கும் அழைப்புகள் வருகின்றன. இந்த மாற்றம் ஏற்கனவே நடந்து வருகிறது.

பாதுகாப்பு முக்கியம்
லாக்டவுனுக்குப் பிறகு எப்போது ஷூட்டிங் தொடங்கும் என தெரியவில்லை. அப்படி தொடங்கப்பட்டாலும் புதிய வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது இருப்பதை விட வேறு சிலவும் இருக்கலாம். இருந்தாலும் இப்போது நமது பாதுகாப்புதான் முக்கியம். அதனால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











