ஆதித்யவர்மா மோசமானவன்.. அப்படி ஒரு காதலன் எனக்கு வேண்டாம்.. நடிகை பனிடா சந்த் தடாலடி!

Recommended Video

Adithya Varma Public Review | Dhruv Vikram | Vikam | Adithya Varma Movie Review

சென்னை: ஆதித்யவர்மா போன்ற காதலன் தனக்கு வேண்டாம் என நடிகை பனிடா சந்த் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம், இந்தியில் கபிர் சிங் என்றும் தமிழில் ஆதித்யவர்மா என்றும் தயாரானது. இந்தப்படம் நேற்று நாடு முழுவதும் ரிலீஸானது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக இந்தி பட நடிகை பனிடா சிங் நடித்திருந்தார்.

நடிப்புக்கு பாராட்டு

நடிப்புக்கு பாராட்டு

ஒரிஜினல் வெர்ஷனான அர்ஜூன் ரெட்டி படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசாய்யா இந்தப் படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

இதுபோன்ற காதல் ஓகேவா?

இதுபோன்ற காதல் ஓகேவா?

இந்நிலையில் படத்தின் நாயகியான பனிடா சந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது படத்தில் உள்ளது போன்ற காதல் உங்களுக்கு ஓகேவா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

ரொம்ப மோசமானவன்

ரொம்ப மோசமானவன்

அதாவது, இதுபோன்ற ஒரு காதல் என் வாழ்க்கையில் இருக்க வேண்டாம். ஆதித்யவர்மா ரொம்ப மோசமானவன், நிறைய குறைகள் அவனிடம் உள்ளது. ஆனால் அதுபோன்ற காதல் நிஜத்தில் இருப்பதையும் மறுக்க முடியாது.

சரியாக செய்திருக்கிறோம்

சரியாக செய்திருக்கிறோம்

இதுபோன்றவற்றை காட்டுவதற்குதான் சினிமா. நாங்கள் அதனை போற்றாமல் சரியாக செய்திருக்கிறோம் என நம்புகிறோம். நாயகனின் கோபத்தால் வரும் துன்பங்களை காட்டியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார் பனிடா சந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X