கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! - நீத்து சந்திரா அதிரடி

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, "படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்" என்று கூற,
"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.
Comments


Click it and Unblock the Notifications