அந்த ஹீரோ மீது பாலியல் புகார் சொன்னதால் வாய்ப்பு தர மறுக்கிறாங்க... பிரபல ஹீரோயின் வருத்தம்

By

சென்னை: பிரபல ஹீரோ மீது பாலியல் புகார் கூறியதால், தனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என்று பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே, அர்ஜூன் நடித்த நிபுணன் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் அர்ஜூன் மீது மீ டூ புகார் கூறியிருந்தார். இது பரபரப்பானது.

கட்டிப்பிடித்தார்

கட்டிப்பிடித்தார்

'2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்னை மனரீதியாகப் பாதித்துவிட்டது. அர்ஜுனுடன் இருமொழி (நிபுணன்) படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு ஒத்திகையின் போது, எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அப்போது நடிகர் அர்ஜுன் என்னைத் திடீர் என்று கட்டிப்பிடித்தார். என் அனுமதி இல்லாமல், என்னை அவர் நெருக்கமாக அணைத்துக் கொண்டார்.

70 நடிகைகளுடன்

70 நடிகைகளுடன்

உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா? எனக் கேட்டேன். பதில் இல்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை'' என்று அவரது புகாரில் கூறியிருந்தார். இவரது புகார் தமிழ், கன்னட திரையுலகில் பரபரப்பானது. இந்த புகாரை நடிகர் அர்ஜுன் மறுத்தார். 'சினிமாவில், 60 முதல் 70 நடிகைகளுடன் நடித்துள்ளேன். ஒருவரும் இதுபோன்ற புகாரை கூறியதில்லை' என்று கூறியிருந்தார்.

பொய் சொல்வதாக

பொய் சொல்வதாக

இதனிடையே ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். ஸ்ருதி ஹரிஹரன் பொய் புகார் சொல்வதாகச் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த பாலியல் புகார் தன் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி.

நட்பை முறித்தார்கள்

நட்பை முறித்தார்கள்

அவர் கூறும்போது, 'இந்த விஷயத்தால் என்னை நம்பியவர்கள், நம்பாதவர்கள் என கன்னட சினிமாவும் இரண்டாக நின்றது. யாரை என் நண்பர்கள் என்று நினைத்தேனோ, அவர்கள் நட்பை முறித்துக் கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் பற்றி இந்தியில் தனுஶ்ரீ தத்தாவும் தமிழில் சின்மயியும் கூறியிருந்தனர். பிறகு எனக்கும் துணிச்சல் வந்தது.

கதையை மாற்றியது

கதையை மாற்றியது

நான் இதை வெளியில் சொன்னால் எனக்கு என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பினேன். சுமார் ஒரு மாதம் யோசித்துக்கொண்டே இருந்தேன். அமைதியாக இருந்தால், அவர்கள் செய்து கொண்டிருப்பதை, தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள் என்று நினைத்தேன். இனி அவர் மற்றவர்களிடம் அப்படி நடந்துகொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.

விளையாட்டாக மாறியது

விளையாட்டாக மாறியது

இறுதியாக சமூக வலைத்தளம் மூலம் சொன்னேன். சில சேனல்கள், நாளிதழ்கள் என் கதையை தலைகீழாக மாற்றியது. கன்னட சினிமாவில் இந்த பிரச்னை எது சரி, எது தவறு என்ற மோசமான விளையாட்டாக மாறியது, நான் எதிர்பார்க்காத ஒன்று. எந்த இன்டஸ்ட்ரியும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

கடந்த ஒரு வருடம் என் வாழ்க்கை என் கையில் இல்லை. நான் அதிகமாகக் கற்றுக் கொண்டேன். நான் சொன்னது செய்தியாகும் என்று நினைத்தேன். என்னை நடிக்க அழைக்க மாட்டார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் இந்தப் பேட்டி பரபரப்பாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X