விஜய்யுடன் முதல் சந்திப்பு.. தோளில் கை வைத்த சி.எம்.. மயங்கி அவர் மீதே விழுந்த குஷ்பு மகள்!

சென்னை: குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இயங்கி வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க மூத்தவர் அவந்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. ஷ்ரவன் என்பவரை அவர் திருமணம் செய்யவிருக்கிறார்.அதனையொட்டி சமீபத்தில் குஷ்பு, சுந்தர்.சி, அவந்திகா, அனந்திதா ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை வைத்தார்கள்.

குஷ்புவும், சுந்தர்.சியும் முறைமாமன் படத்தின்போது காதலிக்க தொடங்கி கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே தாய், தந்தை வழியில் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மூத்தவரான அவந்திகா மலையாளத்தில் ஆரம்பம் படத்தில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். தாய் மாதிரியே தென்னிந்தியாவை கலக்கும் நடிகையாக மாற வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்.

I Fainted on Vijay Khushbu s Daughter Anandita Shares First Meeting Experience
Photo Credit:

இரண்டாவது மகளும் சினிமாவில்: அவந்திகா போலவே அனந்திதாவும் சினிமாவில்தான் உழைக்கிறார். முதலில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தார். அவரிடம் வேலைகளை கற்றுக்கொண்ட அனந்திதா; இப்போது டபுள் ஆக்குபென்சி திரைப்படத்தின் மூலம் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். நல்லவிதமாக வெற்றி பெற்று தாய், தந்தையின் லெகசியை காப்பாற்ற வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்.

Also Read
Parimala & Co X Review - பரிமளா & கோ எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா?
Parimala & Co X Review - பரிமளா & கோ எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா?

அவந்திகாவுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க மூத்தவரான அவந்திகா விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஷ்ரவன் என்பவரை காதலித்தார். வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து இரண்டு பேரும் மணக்கோலம் காணவிருக்கிறார்கள். அதனையொட்டி வேலைகள் எல்லாம் படு ஜோராக நடந்துவருகின்றன.குஷ்பு தன் குடும்பத்துடன் சென்று பிரதமர் மோடியையும், முதலமைச்சர் விஜய்யையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை சமீபத்தில் கொடுத்துவிட்டு வந்தார்.

அனந்திதா பேட்டி: இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அனந்திதா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய்யை நான் முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம், 'வா ம்மா' என சொல்லி தோளில் கை வைத்தார். நான் உடனே மயக்கம் போட்டு அவர் மீதே விழுந்துவிட்டேன்.அவர் உடனே பிடித்துவிட்டார். வெளியே வந்த பிறகு, அவரை சந்தித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் காரில் அமர்ந்து ஜன்னலை ஏற்றிவிட்டு அழுதுவிட்டேன். இரண்டு நிமிடங்கள் கழித்து பார்த்தால் அவரது வண்டி நகரவே இல்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒரே அசிங்கமாக போய்விட்டது" என்றார்.

குஷ்புவின் பதிவு: முன்னதாக விஜய்யை சந்தித்த பிறகு குஷ்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டில், "எங்கள் குடும்பத்துக்கு சிறப்பான மற்றும் மறக்க முடியாத தருணம். எனது அன்பு சகோதரரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யை அவரது வீட்டில் சந்தித்தோம். எங்கள் மகள் திருமண அழைப்பிதழை வழங்கினோம். அவரை பார்க்கும்போதெல்லாம் எப்போதும் நம்முடைய இதயம் சந்தோஷத்தால் நிரம்புகிறது.என் மகள்கள் ரொம்பவே உறசாகமாக இருந்தார்கள். அவரின் மீதான அவர்களது பார்வை அகலவே இல்லை. பிஸியான நேரத்திலும் எப்போதும்போல் அன்பு, புன்னகை காட்டி வரவேற்றார். என் அன்பு சகோதரரே, 'உங்கள் விலை மதிப்பில்லாத நேரம், அன்பு, ஆசீர்வாதங்களுக்கு நன்றி. வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X