அவரோட நடிக்கிறதே போதும்... வேறென்ன வேணும்? வியக்கிறார் ரகுல்

By

Recommended Video

Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

சென்னை: கமல்ஹாசனுடன் நடிக்கிறேன் என்பதே எனக்கு போதுமானது என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங்.

இப்போது ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் படம், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கமலுடன் நடிப்பது

கமலுடன் நடிப்பது

தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனுடன் நடிக்கிறேன் என்பதே போதுமானது என்றும் அவரிடம் அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொள்கிறேன்

கற்றுக்கொள்கிறேன்

அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய சினிமாவில் மிகவும் அனுபவமுள்ள நடிகர் கமல்ஹாசன். அவர் பலவிதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அவருடன் நானும் நடிக்கிறேன் என்பதே எனக்கு போதுமானது. அவரிடம் கற்றுக்கொள்ள அதிக விஷயங்கள் இருக்கிறது' என்றார்.

எனக்குப் பிடிக்கணும்

எனக்குப் பிடிக்கணும்

கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, கதை எனக்குப் பிடிக்க வேண்டும். என்னைத் திருப்திப்படுத்தும் கேரக்டர்கள் என்றால் நடிக்கிறேன். வருகின்ற படங்களில் எல்லாம் நடித்துவிட முடியாது.

ஹீரோவுக்காக நடிக்கலாம்

ஹீரோவுக்காக நடிக்கலாம்

சில நேரங்களில் ஸ்கிரிட்டுக்காக நடிக்கலாம். சில நேரம் நீங்கள் நடிக்காத கேரக்டர் என்பதற்காக நடிக்கலாம். சில நேரம் கேரக்டர் சுமார்தான் என்றாலும் நடிக்க விரும்பும் ஹீரோவுக்காக நடிக்கலாம். இப்படித்தான் படங்களைத் தேர்வு செய்கிறேன்.

3 மொழிகள்

3 மொழிகள்

அடுத்து இந்தியிலும் நடித்துவருகிறேன். அங்கு சிறந்த கதைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். மூன்று மொழிகளிலும் நடித்துவருவது எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X