twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுல ஜூனியர், சீனியர்னு பிரிச்சு பார்க்கிறாங்களாமே..? என்ன சொல்கிறார் நடிகை ஸ்ரேயா

    By
    |

    சென்னை: சினிமாவில் ஜூனியர், சீனியர் என்று பிரித்துப் பார்க்கும் நிலை இல்லை என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

    தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார்.

    இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

    ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை இப்படி பார்க்கிறோம்.. ஆண்ட்ரியாவின் போட்டோவால் ஹேப்பியான ஃபேன்ஸ்!ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை இப்படி பார்க்கிறோம்.. ஆண்ட்ரியாவின் போட்டோவால் ஹேப்பியான ஃபேன்ஸ்!

    அதிக படங்களில்

    அதிக படங்களில்

    சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரேயாவிடம் நீங்கள் ஏன் ஹீல்ஸ் அணிவதில்லை என்று கேட்கப்பட்டது. அப்போது, அவர், ஹீல்ஸ் அணிந்து என் கால்களை காயப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

    தமிழ்ப் படம்

    தமிழ்ப் படம்

    அவர் மேலும் கூறும்போது, நான் ஏற்கனவே நடித்த சில படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அடுத்த தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறேன். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு மற்றும் இந்தி பட வாய்ப்புகளும் இருக்கின்றன.
    சினிமாவில் சீனியர், ஜூனியர் என்று பிரிக்கும் நிலை இருப்பதாக நினைக்கவில்லை.

    சீனியர், ஜூனியர்

    சீனியர், ஜூனியர்

    சினிமா இன்டஸ்ட்ரி சீனியர், ஜூனியர் என்று நினைக்க ஆரம்பித்தால், இங்கு நான் இருந்திருக்க முடியாது. என்னை போல பலர் இருக்க முடியாது. சினிமாவில் கடின உழைப்பு மட்டுமே உதவும். அதுதான் முக்கியம். இப்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள் சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

    வெப்சீரிஸ்

    வெப்சீரிஸ்

    வெப்சீரிஸ் பற்றி கேட்கிறார்கள். சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்தான் ஒரு கதையை சொல்ல முடியும். ஆனால், வெப் சீரிஸில் விரிவாகச் சொல்ல முடியும். எனக்கு பிடித்த வெப் சீரிஸ், கேம் ஆப் த்ரோன்ஸ். நம்ப முடியாத ஆச்சரியமான கதைகளம். ஆனால், நம்பும்படி எடுத்திருக்கிறார்கள். நல்ல வாய்ப்பு கிடைத்தால் நானும் வெப்சீரிஸில் நடிப்பேன் என்றார்.

    English summary
    Shriya Saran says that, she feel there is no senior and junior in industry. It’s all hard work which finally pays off. she would not be here if the industry starts thinking in terms of senior and junior.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X