நாளிதழ் மீது கோபப்படுகிறீர்களே, படத்திலும் தானே 'அப்படி' காட்டுகிறார்கள்?: தீபிகா பதில்
மும்பை: ஒரு பெண்ணாக நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். படத்திலும் கிளீவேஜ் முதல் தொப்புள் வரை காட்டுவது பற்றியும் தீபிகா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழ் நடிகை தீபிகா படுகோனே முன்னழகில் பெரும் பகுதியை காட்டியபடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டது. இதை பார்த்த தீபிகா எனக்கு மார்பகமும் உள்ளது, கிளீவேஜும் உள்ளது. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ட்விட்டரில் கேட்டார்.
இந்நிலையில் இது குறித்து தீபிகா பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

ஓராண்டு
ஓராண்டுக்கு முன்பும் அந்த நாளிதழ் இதே போன்ற செய்தியை வெளியிட்டது. நான் போனால் போகட்டும் என்று அப்போது விட்டுவிட்டேன்.

மீ்ண்டும்
தற்போது மீண்டும் அதே கிளீவேஜ் செய்தியை போட்டுள்ளார்கள். பரபரப்பை ஏற்படுத்த இவ்வாறு செய்தி வெளியிடுகிறார்கள் போன்று.

புகைப்படம்
என்னை அப்படி ஒரு கோணத்தில் புகைப்படம் எடுத்த நபரை நான் குறை கூற விரும்பவில்லை. அவர் தனது வேலையை செய்துள்ளார். அவ்வாறு புகைப்படம் எடுத்தால் அவருக்கு போனஸ் தருகிறேன் என்று கூறியிருந்தார்களோ என்னவோ.

ஃபைன்டிங் ஃபேனி
ஃபைன்டிங் ஃபேனி படம் ரிலீஸாகி நன்றாக ஓடுகிறது. உங்களின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்த பிரச்சனையை எடுத்தால் அனைவரும் இதை பற்றி தான் பேசுவார்கள். இது தேவையா என்று பலர் என்னிடம் கேட்டனர்.

பெண்
இந்த பிரச்சனையை நான் நடிகை என்ற முறையில் அல்ல ஒரு பெண் என்ற முறையில் அணுகியுள்ளேன். ஒரு பெண்ணாக நான் அவமதிக்கப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

பயம்
ஒரு பிரபல நாளிதழுக்கு எதிராக நான் இப்படி பேசினால் பத்திரிக்கையாளர்கள் எனக்கு எதிராக திரும்பிவிடுவார்களோ என்று பயந்தேன்.

ஆதரவு
நான் அந்த நாளிதழுக்கு அளித்த பதிலுக்கு பாலிவுட் பிரபலங்கள் மட்டும் இன்றி உலக மக்களும் ஆதரவு தெரிவித்ததை பார்த்து நிம்மதி அடைந்தேன்.

படங்கள்
படங்களி்ல் பெண்களின் தொப்புள் உள்ளிட்டவற்றை மிக அருகில் காட்டுகிறார்களே என்று கேட்டதற்கு தீபிகா கூறுகையில், அந்த வகையான காட்சிகள் கதாபாத்திரம் மற்றும் கதைக்கு பொருத்தமாக இருந்தால் அதில் தவறு இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











