நான் பண்ற பல விஷயங்கள் சமூக வழக்கத்துக்கு எதிரானதுதான்... அதனால..? நடிகை சன்னி லியோன் ஓபன் டாக்
மும்பை: எனது சில செயல்பாடுகள் சமூக வழக்கத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார் நடிகை சன்னி லியோன்.
பாலியல் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், அதை விட்டுவிட்டு இப்போது பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார்.
2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
Recommended Video

தமிழில் வடகறி
மலையாளத்தில் ரங்கீலா, மதுரராஜா படங்களில் நடித்தார். தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

குழந்தைகள்
இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்துக்கு எதிரானவைதான் என்று தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வழக்கம்
இதுபற்றி அவர் கூறும்போது, நான் செய்யும் பெரும்பாலான விஷயங்கள், சமூக விதிமுறைகளுக்கு எதிரானவை என்று உறுதியாக நம்புகிறேன். அதில் ஏதாவது நோக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது அப்படித்தான் என நினைக்கிறேன். அதனால் எனக்கும் என் குடும்பத்துக்கும் எது நல்லது என நினைக்கிறேனோ, நம்புகிறேனோ அதை பின்பற்றுகிறேன்.

தனிமைப் படுத்துகிறது
அவர்களை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் இவர் இப்படித்தான் என்று ஒருவரை பற்றி முடிவு செய்துகொள்வது எளிதானது. அவர்களை பற்றிய உண்மை நிலை தெரியாமலேயே இப்படி முடிவு செய்கிறார்கள். இந்த பயம் நம்மில் பலரை தனிமைப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.


Click it and Unblock the Notifications











