Don't Miss!
- News ரூ.150 கோடி மதிப்பு! 1200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்!
கூகுள் பார்த்து லஸ்ட் ஸ்டோரிஸ் படக் காட்சியில் நடித்ததாக நடிகை கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என கூகுளைப் பார்த்து கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திக்கேயன் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
லஸ்ட் ஸ்டோரிஸ்:
இதற்கிடையே நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் கியாரா நடித்திருந்தார். அக்காட்சி ஒளிபரப்பான போது, அதனை குடும்பத்தோடு அமர்ந்து பார்த்ததாக அவர் அளித்த பேட்டி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கூகுள் உதவி:
இந்நிலையில், அக்காட்சியில் நடித்த அனுபவம் தொடர்பாக பேட்டி ஒன்றில், "அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
தீவிரம்:
அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். நான் நகைப்புக்குரியவராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்' என கியாரா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை:
லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை கரண் ஜோஹர், ழோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக கியாராவின் சுய இன்பக் காட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.