Don't Miss!
- News
டெல்லியில் என்ன இருக்கு தெரியுமா?அடிமடியிலேயே கை வைக்கும் ஓபிஎஸ்..விக்கித்து நிற்கும் எடப்பாடி டீம்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா இருந்தது... மேடையில் ஓப்பனாக பேசிய மஹிமா நம்பியார்!
சென்னை : சமுத்திரகனி சிறப்பு தோற்றத்தில் நடித்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார்
என்னமோ நடக்குது,மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, அசுரகுரு, ஓமை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் பட விழாவில் பேசிய மகிமா நம்பியார் ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா இருந்தது என ஓப்பனாக பேசியுள்ளார்
பங்கமாக கலாய்த்த நண்பர்கள்.. அப்செட்டான நடிகை.. இயக்குநர் மேல கொலை காண்டுல இருக்காராம்!

பள்ளி மாணவியாக
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் க்யூட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஹிமா நம்பியார். மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தமிழில் சாட்டை என்ற படத்தில் நடித்தார். சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த மஹிமா நம்பியார் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர்,அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, அசுரகுரு என தொடர் வெற்றிப் படங்களில் நடித்தார்

விஜய் ஆண்டனியின் ரத்தம்
இப்போது தமிழில் ஐயங்கரன் மற்றும் விஜய் ஆண்டனியின் ரத்தம் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மஹிமா நம்பியார் படவிழா ஒன்றில் ஆர்யா குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

பெண் போராளியாக
நடிகர் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. இதில் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா ரவிசந்திரன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். பல படங்களில் க்யூட் நடிகையாக வந்து சென்ற மஹிமா நம்பியார் இதில் பெண் போராளியாக நடித்து அசத்தியிருப்பார். மகாமுனி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருப்பார்.

ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா
இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய மஹிமா நம்பியார் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் வரையிலும் அவர் மேல வேற மாதிரி ஐடியா இருந்துச்சு... ஆர்யாவின் முந்தைய படங்களை பார்த்துவிட்டு படப்பிடிப்பில் சீரியஸாக இருக்க மாட்டார் ஜாலியாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஆர்யாவை முதல் முறையாக சந்தித்த பிறகு எனக்கு இருந்த மொத்த ஐடியாவும் தப்பு என்பதை உணர்ந்தேன்.

இப்போ மரியாதை ரொம்ப அதிகமாயிடுச்சு
நான் எப்போதுமே படப்பிடிப்புக்கு போகும்போது என்னுடைய ஷாட்டுக்கு முன்னாடி 10 நிமிடம் முன்னாடி இருக்க வேண்டும் டயலாக்ஸ் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா 30 நிமிடங்களுக்கு முன்பாகவே டயலாக் எல்லாம் பார்த்துக்கொண்டு அங்கு இருப்பார். நான் இதுவரைக்கும் ஒர்க் பண்ண ஹீரோக்களிலேயே ரொம்பவும் அட்மயர் பண்றது ஆர்யாவைத்தான். ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் மேல எனக்கு மரியாதை ரொம்ப அதிகமாயிடுச்சு. இவ்வாறு ஆர்யா குறித்து மஹிமா நம்பியார் படவிழாவில் ஓப்பனாக பேசியுள்ளார்.