அப்போது அஜித் அவ்வளவு பெரிய ஹீரோ என்று தெரியாது.. ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல நடிகை!

By

சென்னை: நடிகர் அஜித் அவ்வளவு பெரிய ஸ்டார் என்று அப்போது தனக்குத் தெரியாது என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பியா பாஜ்பாய்.

பின்னர் கோவா, பலே பாண்டியா, நெருங்கி வா முத்தமிடாதே உட்பட சில படங்களில் நடித்தார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

இவரது இரண்டாவது படம், ஏகன். அஜித் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் இயக்கினார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். நவ்தீப், ஜெயராம் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் பியா பாஜ்பாயும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

எனது முட்டாள்தனம்

எனது முட்டாள்தனம்

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஏகன் படத்துக்கு ஒப்பந்தமானபோது தனக்கு அஜித் யாரென்றே தெரியாது எனக் கூறியுள்ளார் பியா. அவர் கூறியிருப்பதாவது: அந்த படத்தில் ஒப்பந்தமானபோது, அது பெரிய படம் என்றோ, அஜித் மிகப் பெரிய ஸ்டார் என்றோ எனக்குத் தெரியாது. அது தெரியாமல் இருந்தது எனது முட்டாள்தனம்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

ஏற்காட்டில் ஷூட்டிங்கில் இருந்தபோது, எனது காட்சிக்காக அழைத்தார்கள். கேரவனில் இருந்து இறங்கும்போது ரசிகர்கள் கூச்சலிடுவதையும் ஆரவாரம் செய்வதையும் கேட்டேன். ரசிகர்கள் இப்படி சத்தமிடுவது கண்டிப்பாக எனக்காக இல்லை என்பது தெரியும். இது எல்லாம் அஜித்துக்கு என்று தெரிந்தபோது, அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் புரிந்துகொண்டேன்.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram
தெரிந்து கொண்டேன்

தெரிந்து கொண்டேன்

அவர் என்னுடன் நன்றாக பழகினார். அந்த செட்டில் நான்தான், புதியவளாகவும் வயதில் சிறியவளாகவும் இருந்தேன். தென்னிந்திய சினிமாவுக்கும் புதியவள் என்பதால், எனக்கு பாதுகாப்பாகவும் அவர் இருந்தார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். பெரிய ஸ்டாராக இருந்தாலும் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X