96 ரீமேக்... த்ரிஷாவை காப்பி அடிக்கக் கூடாதுன்னு முதல்லயே முடிவு பண்ணினேன்... ஜானு சமந்தா நச்

By

சென்னை: '96' படத்தின் ரீமேக்கில் நடிகை த்ரிஷாவின் நடிப்பை காப்பி அடிக்கக் கூடாது என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இதில் விஜய் சேதிபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.

அனைவருடைய காதல் நினைவுகளையும் உலுக்கிய, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கில்

தெலுங்கில்

இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி கவனிக்கப்படவில்லை.

ஷர்வானந்த்

ஷர்வானந்த்

இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

தனித்துவம்

தனித்துவம்

இந்தப் படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். அதில் ஒரு ரசிகர், உங்களது தனித்துவமான, ஸ்டைலான நடிப்பை இதில் வழங்கி இருக்கிறீர்கள் என்று பாராட்டி இருந்தார்.

நடிப்பு காப்பி

நடிப்பு காப்பி

அவருக்குப் பதில் சொன்ன சமந்தா, த்ரிஷாவின் சிறப்பான நடிப்பை காப்பி அடிக்கக் கூடாது என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். அப்படி செய்தால் அது ஒர்க் அவுட் ஆகாதும் என்றும் நினைத்தேன். அதனால் எனது ஸ்டைலில் நடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X