நடிப்பை விட்டுட்டேன்னு நான் எப்ப சொன்னேன்? அந்த ஐடியாலாம் சுத்தமா இல்லை... நடிகை நஸ்ரியா விளக்கம்

By

சென்னை: நடிப்பை விட்டு விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை நஸ்ரியா.

நஸ்ரியா நடித்துள்ள மலையாள படம் 'டிரான்ஸ்'. அன்வர் ரஷித் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் திருமணத்துக்கு பிறகு நஸ்ரியாவும் அவர் கணவர் பகத் பாசிலும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சமீப காலமாக நடிப்பில் பிசியாகிவிட்ட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

பகத் பாசிலுடன்

பகத் பாசிலுடன்

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. இதில் நடிகை நஸ்ரியாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிப்பை விட்டு விலகிச் செல்லும் முடிவு தனக்கு இல்லை என்று நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, திருமணத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தேன். இப்போது டிரான்ஸ் படத்தில் நடித்திருக்கிறேன்.

ஏன் நிறுத்திவிட்டீர்கள்

ஏன் நிறுத்திவிட்டீர்கள்

இதில் என் கணவர் பகத் பாசிலுடன் நடித்தது புதிய அனுபவம். இடையில் நடிக்காமல் இருந்ததால், ஏன் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள் என்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் தொடர்ந்து நடிக்கவில்லை, அவ்வளவுதான். எனக்கு கேரக்டர் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.

எஸ்தர் லோபஸ்

எஸ்தர் லோபஸ்

அதனால் நல்ல ஸ்கிரிப்டை எதிர்பார்க்கிறேன். டிரான்ஸ் படத்தில் பகத்துடன் நடித்தது பற்றி கேட்கிறார்கள். வேறு யாரும் எங்களை ஒன்றாக நடிக்க கேட்கவில்லை. இந்தப் படத்தில் வாய்ப்பிருந்தது, நடித்தோம். இதில் நான் நடித்த கேரக்டர், இதுவரை பண்ணாதது. எஸ்தர் லோபஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

Recommended Video

Alya manasa Baby bump | Happy Faces | Alya Manasa Sanjeeve
நடிக்காத கேரக்டர்

நடிக்காத கேரக்டர்

வழக்கமாக ஒரு படத்தில் நடித்தால், அந்த கேரக்டரை என் ரியல் லைஃப் கேரக்டருடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். இதுதான் வழக்கம். ஆனால், டிரான்ஸ் பட கேரக்டர் அபபடியில்லை. நான் இதுவரை நடிக்காத கேரக்டர். அதனால் நடிக்க சம்மதித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால், பகத்துடன் இணைந்து தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X