தனுஷ் பட ஷூட்டிங்கில் எனக்கு வந்த கஷ்டம்.. பீரியட்னுகூட பார்க்கல.. நடிகை பார்வதி ஓபன் டாக்

சென்னை: நடிகை பார்வதி திருவோத்து தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்; அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் அழுத்தமானவை. அதன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் படத்தின் ஷூட்டிங்கில் நேர்ந்த சங்கடமான நிலைமை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர்.

மலையாள திரையுலகத்தில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த பார்வதி திருவோத்து தமிழில் பூ படத்தில் முதன்முறையாக நடித்தார். சசி இயக்கியிருந்த அப்படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படத்தில் பார்வதி மாரி என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். மிகப்பெரிய வரவேற்பை பார்வதியின் நடிப்பு பெற்றது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கண்டிப்பாக பெரிய நடிகையாக வருவார் என்று கணிக்கப்பட்டது.

கதை தேர்வில் நிதானம்: அதன்படி அவருக்கு வாய்ப்புகளும் குவியத்தான் செய்தன. ஆனால் கதைகளை ஒத்துக்கொள்வதில் ரொம்பவே நிதானமாக இருப்பவர் பார்வதி. இதனால் அவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களில் அவர் ஏற்கும் கேரக்டர்கள் காலத்துக்கும் நின்று பேசும்படியாக அமைந்துவிடுகின்றன. தமிழில் எப்படியோ மலையாளத்தில் அதைவிட அதிகமாகவே நல்ல பெயரை பெற்றிருக்கிறார். தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

I Had No Support Parvathy Thiruvothu Recalls Distressing Incident on Maryan Film Set
Photo Credit:

கடைசியாக நடித்த படம்: கடைசியாக அவர் தமிழில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் எப்போதுமே அவர்தான் நடிப்பில் அப்ளாஸை அதிகம் அள்ளிக்கொண்டு செல்வார். ஆனால் இந்தப் படத்தில் விக்ரமுக்கு இணையாக பார்வதியும் கைத்தட்டல்களை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கலானுக்கு பிறகு சில தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டதாகவும்; அதில் சிலவற்றுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும்; அதுதொடர்பான அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனதில் பட்டதை பேசும் பார்வதி: பார்வதியை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடக்கூடியவர். அதுமட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அசிங்கங்கள், கொடுமைகள், தவறுகள் என அனைத்துக்கும் எதிராகவும் குரல் கொடுப்பவர். ஹேமா கமிஷன் அறிக்கை விஷயத்தில்கூட மலையாள திரையலகத்தை சேர்ந்த பல நடிகைகள் வாய் மூடி மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் பார்வதியோ சகட்டுமேனிக்கு விளாசிவிட்டார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் மரியான் படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த ஒரு பேட்டியில், "மரியான் படத்தில் காதல் காட்சி ஒன்றில் தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி நடந்தேன். மாற்றிக்கொள்வதற்கு உடையும் கொண்டு செல்லவில்லை. ஒருகட்டட்தில் ட்ரெஸ் மாற்றுவதற்கு ஹோட்டல் செல்ல வேண்டும் என கேட்டால்; அதற்கும் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனக்கு பீரியட் எனவே கண்டிப்பாக செல்ல வேண்டும் என சத்தமாக சொன்னேன். பிறகுதான் என்னை அனுமதித்தார்கள். என்னையும் சேர்த்து அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் மூன்று பெண்கள் மட்டுமே இருந்தார்கள். எனக்கு ஆதரவாக யாருமே இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X