ஷூட்டிங்கில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பறந்த ஹீரோயின்!

By

சென்னை: ஷூட்டிங்கில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தால், தனியார் விமானத்தை அமர்த்தி பறந்திருக்கிறார் பிரபல ஹீரோயின்.

Recommended Video

Actress Pooja & Husband John Kokken Funny Quarantine | Lock Down

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லை.

தெலுங்கில் கவனம் செலுத்திய இவர், இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானது.

விஜய் ஹீரோயின்

விஜய் ஹீரோயின்

இதனால், டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடிக்கிறார். தமிழில் சூர்யாவின் அருவா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டதை சமீபத்தில் மறுத்திருந்தார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது, இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியிருந்தார். விஜய் அடுத்து நடிக்கும் படத்தில், இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். ஆனால், உறுதிப்படுத்தப் படவில்லை.

ஜார்ஜியா

ஜார்ஜியா

இவர், இப்போது பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். பீரியட் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தியிலும் உருவாகிறது. இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, சமீபத்தில் ஜார்ஜியா சென்று வந்திருந்தார் பூஜா ஹெக்டே. இவர் இந்தியில் இப்போது சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி (Kabhi Eid Kabhi Diwali) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கற்க முடியும்

கற்க முடியும்

இதில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, சல்மான் கான், சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார். அவருடன் நடிக்கும்போது கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கும்போது பயம் இருந்தாலும் என்னைப் போன்ற நடிகைகளுக்கு அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

தனியார் விமானம்

தனியார் விமானம்

இதன் ஷூட்டிங், ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால், கொரோனாவால் கால்ஷீட் பிரச்னை. இந்தி மற்றும் தென்னிந்திய சினிமா துறைகளில் கவனம் செலுத்துவது எளிதானதல்ல. ஐதராபாத், மும்பை, வெளிநாடு என கால்ஷீட்களை கவனமாக கையாள வேண்டும். ஒருமுறை படப்பிடிப்பில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி சென்ற அனுபவமும் இருக்கிறது.

சவாலானது

சவாலானது

ஒரே நேரத்தில், ஒரு படத்தில் நடிப்பதுதான் என்னைப் பொறுத்தவரை சிறந்தது என்று நம்புகிறேன். அப்போதுதான் அந்த கேரக்டருக்குள் நீங்கள் வாழ முடியும். அந்த கேரக்டராக மாற முடியும். 10 நாட்கள் இந்தப் படம், பிறகு வேறு படம் என என்னை போல இருப்பது சவாலானதுதான் என்று தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X