சினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்

Recommended Video

உள்ளாடை இல்லாமல்.. திரும்பவும் செம ஹாட்டாக வந்த ரகுல்..வீடியோ

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து எனக்கு கிடைத்து விட்டது. வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கொண்டேன். அதனால் தான் தோல்விப் படங்களிலும் நான் நடிக்க வேண்டியது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் எனக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் கில்லி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் மகிழ் திருமேனி இயக்கிய தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவர் தமிழில் கடைசியாக சூர்யா நடித்த படம் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

I have matured into choosing stories-Rakul Preet Singh

தற்போது நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை. தமிழில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததால் தான் பட வாய்ப்புகள் இல்லை என்று சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருகின்றனர்.

I have matured into choosing stories-Rakul Preet Singh

சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து எனக்கு கிடைத்து விட்டது. வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கொண்டேன். அதனால் தான் தோல்விப் படங்களிலும் நான் நடிக்க வேண்டியது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தியில் சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்ததும், தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் எனக்கு வந்துவிட்டது. சும்மா நான்கு பாடல் காட்சிகளில் மட்டும் வந்து விட்டு போவதில் எனக்கு விருப்பம் இல்லை.

I have matured into choosing stories-Rakul Preet Singh

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்துள்ளேன். தமிழிலும் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டேன். இந்தியில் ரன்வீர் சிங்குடனும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது, என்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X