லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக நான் வேலை செய்வது இல்லை.. நச் பதில் கொடுத்த நயன்தாரா!
சென்னை: ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.
இன்று தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்த பிறகு தனக்கு எப்படி இருக்கிறது என்று அனுபவத்தை பகிர்ந்த த்ரோபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

பல ஹிட் கொடுத்த நயன்தாரா
2003 ஆம் ஆண்டு சினிமா துறையில் கால் பதித்த நடிகை நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, சிவகாசி, கள்வனின் காதலி, வல்லவன் போன்ற பல படங்களில் நடித்தார். பில்லா, யாரடி நீ மோகினி போன்ற பல படங்களின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவரது மார்க்கெட் எகிறியது. தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்
தனக்கேற்ற கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தன்னை பற்றி யார் என்ன நெகட்டிவாக பேசினாலும் அனைத்தையும் உடைத்து எரிந்து இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக முன்னணி இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. தமிழ் ஹீரோவுக்கு ஈக்குவலாக சம்பளம் வாங்கும் சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்
அறம்,கோலமாவு கோகிலா, ஐரா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், O2 போன்ற ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்றும் ட்ரெண்டாகவே இருக்கின்றது.

ஹிந்தியில் அறிமுகம்
சமீபத்தில் இவர் நடித்த காத்தார்கள் இரண்டு காதல் படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன், இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தாவும் இணைந்து நடித்திருந்தார். தற்போது நடிகை நயன்தாரா இறைவன் மற்றும் கனெக்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்த பிறகு தான் எப்படி இருக்கிறார் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார்.

அன்று போல் இன்றும்
லேடி சூப்பர் ஸ்டார் என்ற கிரீடத்தை நீங்கள் சூடி கொண்டு இருக்கும் பொழுது, எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள்,அதனை தக்க வைத்து கொள்ள எவ்வாறு வேலை செய்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நயன்தாரா கூறிய பதில் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. தன்னை பற்றி நயன்தாரா கூறுகையில் , நான் வெற்றி பெற்று விட்டேன் என்ற எண்ணமோ, டைட்டிலுக்காகவோ நான் வேலை செய்வதில்லை, என்னுடைய முதல் நாளில் நான் எப்படி பயந்து பயந்து வேலைக்கு வந்தேனோ, ஷூட்டிங்கில் இருந்தேனோ, அதே பயம் இன்றும் எனக்கு இருக்கின்றது, சூட்டிங் முடிந்து விட்டு வீடு சென்ற பிறகு நான் செய்த வேலை எனக்கு திருப்தியாக இருக்கிறதா என்பது மட்டும்தான் நான் பார்ப்பேன். கடந்த 18 வருடங்களாக நான் இதை மட்டும் தான் ஃபாலோ செய்து வருகிறேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். இந்த பதில் நயன்தாரா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











