11 வயசுலேயே அஜித் சாருக்கு Propose பண்ணேன்.... காதல் சரண்யாவின் முதல் காதல்!
சென்னை : காதல் கவிதை, நீ வருவாய் என உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சரண்யா நக் காதல் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்
காதல், பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ரெட்டை வாலு, ஈர வெயில், முயல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 11 வயதிலேயே அஜித் சாருக்கு ப்ரொபோஸ் பண்ணியதாக சரண்யா நக் தெரிவித்துள்ளார்.

ஹீரோயினுக்கு தோழியாக
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை சரண்யா நக். காதல் கவிதை மற்றும் நீ வருவாய் என உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சரண்யா நக் அதன் பிறகு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து அனைவராலும் அறியப்பட்டார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா இணைந்து நடித்த காதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் உருக வைத்தது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா அறிமுகப்படுத்தப்பட்டார் சந்தியாவுக்கு தோழியாக நடிகை சரண்யா நடித்திருப்பார்

சவாலான கதாபாத்திரத்தில்
காதல் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க காத்துக்கொண்டிருந்த சரண்யா நக் இயக்குனர் புரட்சி இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். மிகவும் விறுவிறுப்பான கதை களத்தில் சவாலான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்த சரண்யா நக் அதன்பிறகு ரெட்டை வாலு, ஈர வெயில், முயல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக
இருப்பினும் சரண்யாவுக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி படமாக எதுவும் அமையாததால் இப்பொழுது படங்களில் நடிக்காமல் சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சரண்யா அதில் கூறியிருப்பதாவது இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித் நடிப்பில் வெளியான நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தேன்.
Recommended Video

அஜித் சாருக்கு Propose பண்ணேன்
அப்பொழுது ஒரு நாள் படபிடிப்பில் அஜித்திடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா எனக் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அஜித் சிரித்தாராம் , அப்படின்னா நான் சீக்கிரமா வந்துடுரேன் என சொல்லிவிட்டு வெட்கப்பட்டுக் கொண்டே ஓடி விட்டாராம். நீ வருவாய் என படத்தில் நடிகர் அஜித்திற்கு Propose செய்த மறக்க முடியாத நிகழ்வை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை சரண்யா நக் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











