நானா பைத்தியம்... கன்னட நடிகை ரிஷிகா சிங் வருத்தம்

பெங்களூர்: எனக்கு திருமணம் நின்றதால் மன அழுத்தம் ஏற்பட்டது உண்மைதான். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால் நான் பைத்தியம் அல்ல என்று கூறியுள்ளார் கன்னட நடிகை ரிஷிகா சிங்.

ரிஷிகாவுக்கும், சந்தீப் என்பவருக்கும் இம்மாதம் 15ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று திருமணத்தை சந்தீப் நிறுத்திவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷிகா சிங் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதைத்தான் தற்போது ரிஷிகா மறுத்துள்ளார்.

துணியெல்லாம் வாங்கியாச்சு

துணியெல்லாம் வாங்கியாச்சு

இதுகுறித்து ரிஷிகா கூறும்போது, ‘ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக அடிக்கப்பட்ட திருமண அழைப்புகள் என் வீட்டில் இருக்கின்றன. கல்யாணத்துக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கிவிட்டேன். ஆனால் நிச்சயதார்த்தம் திடீரென்று நின்றுவிட்டது.

மன அழுத்தம் தாங்கல...

மன அழுத்தம் தாங்கல...

நான் மனஅழுத்தத்துக்கு ஆளானேன். நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டால் எந்த பெண்ணின் மனதும் பாதிக்கத்தானே செய்யும்.

அவரோட அம்மாதான் காரணம்

அவரோட அம்மாதான் காரணம்

நிச்சயதார்த்தம் நின்றதற்கு அவரது அம்மாவின் தூண்டுதல்தான் காரணம்.

வதந்திகளை நம்பவில்லை...

வதந்திகளை நம்பவில்லை...

மனநிலை பாதித்ததாக என்னைப் பற்றி பரவிய வதந்திகளை நம்பவில்லை என்று நான் சென்ற இடங்களில் ரசிகர்கள் கூறினர். அது எனக்கு வலிமையும் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றலும் தந்திருக்கிறது என்றார் ரிஷிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X