இந்த லாக் டவுன் முடிந்தவுடனே.. மாளவிகா மோகனன் இதைத்தான் வாங்க போறாராம்.. அப்போ செம ட்ரீட் இருக்கு!
சென்னை: இந்த ஆண்டுக்குள் சொந்த பைக் ஒன்றை வாங்க மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் திட்டமிட்டுள்ளார்.
Recommended Video
சமீபத்தில் ரேஸ் பைக் ஓட்டும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி இருந்தார் மாளவிகா.
அந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மாளவிகாவை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

வீட்டுக்குள்ளே
கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கின்றனர். லாக் டவுன் நேரத்தில் பழைய நினைவுகளை கிளறும் விதமாக, கடந்த ஆண்டு நொய்டாவில் உள்ள சர்வதேச ஃபார்முலா ஒன் டிராக்கில் பைக் ஓட்டிய வீடியோவை மாளவிகா வெளியிட்டு இருந்தார்.

15 வயசுலேயே
தனது 15 வயதிலேயே மாளவிகா மோகனனுக்கு பைக் மீது ஆசை வந்து விட்டது. ஆனால், அப்போது அவரது பெற்றோர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. 18 வயது நிரம்பிய உடனே முதல் வேலையாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கி பைக்குகளை ஓட்ட தொடங்கியுள்ளார் நம்ம மாஸ்டர் நாயகி.

புடிச்ச பைக்
மாளவிகா மோகனனின் நண்பர் ஒருவரிடம் இருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கில் தான் ஆரம்பத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அந்த பைக்கை ஓட்டும் போது நல்ல பேலன்ஸ் பெற முடிந்ததை அடுத்து, தனக்கு பிடித்த பைக் புல்லட் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளார். ஃபார்முலா ஒன் ரேஸில் யமஹா R15 வெர்ஷன் 3 பைக்கை ஓட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோடு ட்ரிப்
பைக் பிரியர்களின் பெரிய கனவே நீண்ட தூரம் ரோடு ட்ரிப் போவது தான். 18 வயதில் இருந்தே அப்படியொரு கனவு மாளவிகா மோகனனுக்கும் இருந்து வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக லடாக்கில் உள்ள லே மாவட்டத்திற்கு ரோடு ட்ரிப் சென்றுள்ளார். அப்போதும், வாடகை பைக் ஒன்றை வாங்கித் தான் சென்றுள்ளாராம்.

புது பைக்
சமீபத்தில் மாளவிகா மோகனன் ஷேர் செய்த வீடியோ வைரலான நிலையில், இந்த லாக் டவுன் முடிந்தவுடன் புதிய பைக் ஒன்றை இந்த ஆண்டுக்குள் வாங்க திட்டமிட்டுள்ளார். தனக்கு ரொம்ப பிடித்த ராயல் என்ஃபீல்டு பைக்கை தான் மாளவிகா வாங்க முடிவு செய்து வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











