Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக காத்திருக்கட்டுமே.. எங்களுக்கு கவலையில்லை.. நாராயணன் திருப்பதி
- Finance
4 மாற்றங்கள்.. வருமான வரியில் இதைத் தாண்டி எதுவும் கிடைக்காது.. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பரதநாட்டியம் மட்டும் இல்ல எனக்கு இதுவும் தெரியும்.. லட்சுமி மேனன் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன் தனது முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர்.
கும்கி படத்திற்கு பிறகு, மிருதன், சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன், ரெக்க, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்தார்.
கும்கி திரைப்படம் லட்சுமி மேனனுக்கு மட்டுமல்லாமல் விக்ரம் பிரபுவுக்கும் அறிமுகப்படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.
கிரிக்கெட் வீரருடன் ரகசிய காதல்.. டேட்டிங் போன நடிகை.. இதென்னடா புதுக்கூத்து !

பல ரசிகர்கள்
லட்சுமி மேனனின் எதார்த்தமான நடிப்பும், ஹோம்லியான இவரது லுக்கும் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்தது. நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் கைதேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்து சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியத் தொடங்கியது.

கடைசி படம்
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ரெக்க திரைப்படத்திற்கு பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஏற்றவாறு உடல் எடையும் அதிகரித்து காணப்பட்டார் நடிகை லட்சுமி மேனன். சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து பல வீடியோகளை வெளியிட்டார் நடிகை லட்சுமி மேனன்.

பரதநாட்டியம் தெரியும்
நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் கலக்கி வருகிறார் நடிகை லட்சுமி மேனன். சமீபத்தில் இவர் பரத நாட்டியம் ஆடிய புகைப்படங்களும் வீடியோக்களும் நமது வலைதளத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் கதக் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவுகின்றது.

கதக் டேன்ஸ்
மிகவும் ஸ்லிம்மான தனது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நடிகை லட்சுமி மேனன் சமீபத்தில் உடல் எடை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் நன்றாக ஆடுவார் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் கதக் நடனம் சூப்பராக ஆடுவார் என்ற ரகசியம் தற்போது இந்த வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.