தி.முகவை ரொம்ப பிடிச்சிருக்கு; ஸ்டாலினை இன்னும் ரொம்ப பிடிச்சிருச்சு... நடிகை பாபிலோனா

By Mayura Akilan

ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் கடைசியில் கவர்ச்சி நடிகை ஆகிவிட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் பாபிலோனா. நடிப்போடு அதிமுக, காங்கிரஸ் என ஒரு ரவுண்டு அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார் பாபிலோனா.

இப்போது திமுகவில் இணையலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதாக டைம்பாஸ் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேற்கொண்டு படியுங்களேன்.

ரொம்ப நல்லப்பொண்ணு

ரொம்ப நல்லப்பொண்ணு

நான் அரட்டை அடிக்கிறது, பார்ட்டிக்குப் போய் ஆடுறதுனு மற்ற நடிகைகள் மாதிரி இருக்க மாட்டேன். பீர் அடிக்கிற பழக்கம்கூட எனக்குக் கிடையாது.

திமுகவில் இணைவேன்

திமுகவில் இணைவேன்

எனக்கு யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க பிடிக்காது. இல்லை என்றால் எப்போதோ திமுகவில் சேர்ந்திருப்பேன். இப்போது சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் திமுகவில் இணைவேன்.

ஸ்டாலினைப் பிடிக்கும்

ஸ்டாலினைப் பிடிக்கும்

தி.மு.கவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. முக்கியமா ஸ்டாலின். அவர் 'குறிஞ்சி மலர்' சீரியல்ல நடிச்சப்பவே ரொம்ப ரசிச்சுப் பார்த்திருக்கேன். ஸ்டாலின் அரசியலில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இன்னும் ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.

என்னுடைய கனவு

என்னுடைய கனவு

கட்சியில் ஸ்டாலின் காட்டும் வேகம்... சான்ஸே இல்லை. பொதுவா எல்லா நடிகைக்கும் அஜித், விஜய்கூட நடிக்கணும்னு கனவு இருக்கும். ஆனா, எனக்கு தி.மு.க-வுல சேரணும்கிறதுதான் கனவு.

ஸ்டாலின் பேச்சு பிடிக்கும்

ஸ்டாலின் பேச்சு பிடிக்கும்

கட்சியில் எனக்குக் கிடைக்கிற பதவிகள்கூட அடுத்த விஷயம்தான். இத்தனைக்கும் நான் ஸ்டாலினை நேர்ல பார்த்தது இல்லை. நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினின் பேச்சுகளையெல்லாம் யூடியூப்ல தேடித் தேடிப் பார்த்தேன்.

இலவசமே கட்சி

இலவசமே கட்சி

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த அ.தி.மு.க வேற. இப்போ 'இலவசமே' கட்சினு ஆகிடுச்சு. அம்மா உணவகம், அம்மா உப்பு... இதெல்லாம் மக்களுக்குத் தேவைதான். ஆனா, அதைவிட மக்களுடைய குறைகள் எக்கச்சக்கமா இருக்கே? நல்ல ஸ்கூல் கட்டலாம், மக்களுக்கு வரிச் சலுகை கொடுக்கலாம்.

ஆள்தான் வெள்ளை

ஆள்தான் வெள்ளை

ராகுல்காந்தியைப் பிடித்துப்போய்தான் கட்சியில் சேர்ந்தேன். இப்போ, ராகுலைப் பற்றி ஒரு வரியில் சொல்லணும்னா, 'ஆள்தான் வெள்ளை; மத்ததெல்லாம் தொல்லை'. '' என்று கூறியுள்ளார் பாபிலோனா.

இதற்கு காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் என்ன ரியாக்சன் காட்டப்போகிறார்களோ தெரியலையே?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X