ஹீரோயினாக நடிக்காவிட்டாலும்.. கர்ப்பமாவது பற்றி திரிஷா ஓபன்.. மேடம் செம தெளிவு
சென்னை: கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா இந்த வருடத்தில் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் கருப்பு, விஸ்வம்பரா ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரவிருக்கின்றன. சித்தார்த்துடனும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் திரிஷாவின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் திரிஷா. இதன் காரணமாக தமிழில் அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய திரிஷாவுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் அடிமையானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது சிரிப்பு, நடிப்பு, அழகு என அத்தனையையும் ரசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சறுக்கல் டூ எழுச்சி: ஒரு நடிகை என்றாலே இடையில் சில சறுக்கல் வருவது இயல்புதான். அந்த சறுக்கல் திரிஷாவுக்கும் வந்தது. ஆனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர்; கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து ரூட்டை மாற்றினார். அப்படி அவர் நடித்த 96 படம் பெரிய கம்பேக்கை அவருக்கு கொடுக்க; மீண்டும் திரிஷா தீ கோலிவுட்டில் பற்றிக்கொண்டது. அப்போதிருந்து திரிஷா மீண்டும் எழுச்சி கொள்ள ஆரம்பித்தார்.
டாப் ஹீரோக்களுடன் ஜோடி: திரிஷாவுக்கு இப்போது 43 வயது ஆகிறது. இப்போதும் படு இளமையாக இருக்கும் அவர் அஜித், கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கருப்பு, சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் விஸ்வம்பரா ஆகிய திரைப்படங்கள் வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் விஜய் விஷயத்தில் திரிஷாவின் பெயர் ரொம்பவே அடிபட்டு வருகிறது. அவரும் அதற்கு தகுந்தபடிதான் நடந்துகொள்கிறார்.
பிரபலங்களும் அப்படி: பிரபலங்களுமே கூட திரிஷா விஷயத்தில் சில விஷயங்களை பூடகமாக கூறிவருகிறார்கள். மே நான்காம் தேதி திரிஷா பிறந்தநாள் வந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவித்த ராதிகா, என்ன மாதிரியான பிறந்தநாள் கிஃப்ட் இது என்று தெரிவித்திருந்தார். அன்றைய தினம்தான் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்தன. விஜய்யின் தவெக வென்றார். எனவே விஜய்தான் திரிஷாவுக்கு அப்படி ஒரு கிஃப்ட்டை கொடுத்திருக்கிறார் என்று ராதிகா சொல்லியிருப்பதாக கருத்துக்கள் எழுந்தன.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் திரிஷாவின் பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "கர்ப்பம் ஆனால் மட்டும்தான் நான் நடிப்புக்கு பிரேக் எடுப்பேன். மற்றபடியெல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை. ஹீரோயின் கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் எனது வயதுக்கு தகுந்த கதாபாத்திரங்கள் வந்தாலும் நடிப்பேன். ஆகமொத்தம் சினிமாவிலிருந்து தள்ளி மட்டும் இருக்கமாட்டேன். கடைசி மூச்சு இருக்கும்வரை நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்" என்றிருக்கிறார். திடீரென திரிஷாவின் கர்ப்பம் பற்றிய பேச்சு ட்ரெண்டாவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
