»   »  ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்யப் பிடிக்கும்- த்ரிஷா

ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்யப் பிடிக்கும்- த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் நடிகர்களில் பிளேபாய் என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் ஆர்யாதான், அவருக்குத் தான் அந்தப் பெயர் கரெக்ட்டாக இருக்கும் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆர்யா.

I Love Romance with Arya – Trisha

ஆர்யாவின் படங்களில் நடித்த அத்தனை நடிகைகளுடனும் ஆர்யாவை இணைத்து கிசுகிசு வந்துவிட்டது, ஆனால் ஆர்யாவிடம் இதுபற்றிக் கேட்டால் நான் அவர்களுடன் நட்புடன் தான் பழகுகிறேன் என்று பதில் கூறுவார்.

ஆனாலும் மீடியாக்களில் ஆர்யாவின் செய்திகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை, சரி நமக்கென்ன அதைப் பற்றி நேரடியாக விஷயத்திற்கு வருவோம். தற்போது நடிகை த்ரிஷா சர்வம் படத்தில் நடித்த போது ரொமான்ஸ் காட்சிகளில் ஆர்யாவுடன் என்ஜாய் பண்ணி நடித்ததாகக் கூறியிருக்கிறார்.

I Love Romance with Arya – Trisha

திரையில் ஆர்யாவின் கெமிஸ்ட்ரி மற்றும் ரொமான்ஸ் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமக்கும் தெரியும், இருப்பினும் த்ரிஷா இப்படிக் கூறியிருப்பதால் திரைக்குப் பின்னால் இருவருக்குமிடையே வேறு ஏதேனும் இருக்குமோ? என்று (வழக்கம் போல) ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Actress Trisha Says About Arya ” I Loved Romancing Him”.
Please Wait while comments are loading...