என் மீதான கவர்ச்சி அடையாளம் பிடிச்சிருக்கு: சமீரா ரெட்டி

பொதுவாக நடிகைகள் தங்களை திறமையான நடிப்பு, அருமையான நடன அசைவுகள், வசீகர அழகு போன்ற வகையில் 'தரமான நடிகை' என அடையாளம் காணப்படுவதையே விரும்புவார்கள்.
கவர்ச்சி பொம்மையாக அடையாளம் காணப்பட்டால் ஐட்டம் கேர்ள் என்ற பேனரில் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும்.
ஆனால் சமீரா ரெட்டியோ தனக்கு 'செக்ஸ் பாம்' என்ற அடையாளம் பிடித்திருப்பதாக கூறுகிறார்.
மேலும், நான் நல்ல நடிகை என காட்டிக்கொள்வதற்காக ஜாலியான 'அஜால் குஜால்' கேரக்டர்களை ஒதுக்கித் தள்ள முடியாது என்றும் கூறுகிறார்.
முப்பதை தொட்டிருக்கும் சமீரா ரெட்டி இதுபற்றி மேலும் கூறுகையில், 'ஆரம்பத்தில் கவர்ச்சி பொம்மையாக நான் திரையில் காட்டப்படும் போது தான் நிறைய ரசிகர்கள் எனக்கு உருவானார்கள்.
அந்த இமேஜ் எனக்கு நன்றாக ஒர்க்அவுட் ஆனது. நிறைய நடிகைகள் ஆரம்பத்தில் பலதரப்பட்ட கிளாமர் ரோல்களை நடித்த பின்னர் தான் திறமையான நடிகைகளாக மாறுவார்கள்.
ஜனரஞ்சகமான படம், தரமான படம் எது எனக்கு வித்தியாசம் புரியும். ஆனால் இரண்டையும் தர நான் விரும்புகிறேன்.
நான் என்னை நல்ல நடிகையாகவும் வெளிக் காட்டியிருக்கிறேன். அதே சமயம் டைம் பாஸ் மசாலாக்களையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறேன்' என்றார்.
அசல் படம் குறித்து குறிப்பிடுகையில், 'கடந்த ஓராண்டாக அசல் படத்துக்காக வேலை பார்த்தேன். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட அனுபவங்கள் மிகவும் அருமையாக இருந்தது' என்றார்.


Click it and Unblock the Notifications











